காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் அடுத்த சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள பாலு செட்டி சத்திரம் பகுதி பஜார் வீதியில் தனியார் ,ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஏடிஎம் மையத்தில் இரண்டு ஏடிஎம் இயந்திரங்கள் உள்ள நிலையில், நேற்று அதிகாலை ஏடிஎம் மையத்திற்குள் புகுந்த மர்ம நபர் ஒரு ஏடிஎம் இயந்திரத்தை உடைத்துக் கொண்டு இருந்துள்ளார்.
நேற்று முன் தினம் இரவு நேரத்தில் ரோந்து சுற்றும் போலீசார் நேற்று அதிகாலை நேரங்களில் ஏடிஎம் இயந்திரங்களை கண்காணித்துவிட்டு செல்வது வழக்கம். அதன்படி ரோந்து போலீசார் ஏடிஎம் மையத்தை கண்காணிக்க வந்த பொழுது சத்தம் கேட்ட மர்ம நபர் உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். ஏடிஎம் மையத்திற்கு வந்த ரோந்து போலீசார் இயந்திரம் அடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு உடனடியாக பாலு செட்டி சத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஏடிஎம் இயந்திரத்தில் சோதனை மேற்கொண்டு கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர். சிசிடிவி காட்சியை வைத்து கொள்ளை சம்பவத்தை ஈடுபட்ட நபர்களை தேடி வந்த நிலையில் காஞ்சிபுரம் அடுத்த முசரவாக்கம் பகுதியைச் சேர்ந்த யுவராஜ் (32) என்பவரை கைது செய்து விசாரணை செய்ததை குடிபோதையில் பணத்திற்காக ஆசைப்பட்டு தொடர் முயற்சியில் ஈடுபட முயன்றதாகவும் திடீரென அக்கம்பக்கத்தின் சத்தம் கேட்டு தப்பி ஓடியதாக வாக்குமூலம் அளித்தார். இது அடுத்து பாலுசெட்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கொலை முயற்சி ஈடுபட்ட ஏடிஎம் இயந்திரத்தில் வைக்கப்பட்டிருந்த 7 லட்சம் ரூபாய் பணம் இருந்தும் தப்பியது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்