சிதம்பரம் பள்ளிப்படை அருகே செல்போன் பேச முயன்றபோது முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது உரசியதில் தவறி விழுந்த நபர் பின்னால் வந்த அரசு பேருந்து சக்கரத்தில் இருந்து மயிரிழையில் உயிர்தப்பிய காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

 


 

சிதம்பரம் அருகே பள்ளிப்படை அருகில் நெடுஞ்சாலையில் சிதம்பரம் நகர பகுதியை நோக்கி இருசக்கர வாகனத்தில் பழனிவேல் (34) என்பவர் வந்து கொண்டிருந்தபோது அவருக்கு செல்போன் அழைப்பு வந்தது அப்போது அவர் செல்போனை எடுத்த போது முன்னால் சென்ற அரிம்ஸ்ஹாங் ஸ்கூட்டி வாகனத்தின் மீது எதிர்பாராத விதமாக மோதியதில் இரண்டு பேரும் நிலைதடுமாறி நெடுஞ்சாலையில் கீழே விழுந்தனர் இதனிடையே பின்னால் சிதம்பரம் நோக்கி வந்துகொண்டிருந்த அரசு பேருந்து பழனிவேல் வந்துகொண்டிருந்த இரு சக்கர வாகனம் மீது ஏறியது இதில் பழனிவேலின் இருசக்கர வாகனம் முற்றிலுமாக சேதம் அடைந்த நிலையில் பேருந்து சக்கரத்தில் இருந்து மயிரிழையில் பழனிவேல் தப்பித்தார் இந்த நிகழ்வின் கண்காணிப்பு கேமரா காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இதுகுறித்து சிதம்பரம் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் விபத்தில் சிக்கிய இருவரும் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

 


 

மற்ற நாடுகளை விட அதிகமாக இந்தியாவில் நாள் ஒன்றுக்கு சாலை விபத்துக்களில் 415 பேர் வரை உயிரிழக்கிறார்கள். இந்த நிலையில் தமிழகத்தில் நெடுஞ்சாலை ரோந்து குழுக்கள் மற்றும் சிறப்பான ஆம்புலன்ஸ் சேவையால் கடந்த 4 வருடங்களில் 54 சதவிகிதம் வரை சாலை விபத்தால் ஏற்படும் மரணங்கள் குறைந்துள்ளன. 2016ஆம் ஆண்டு சாலை விபத்துக்களில் சிக்கி 17,218 பேர் உயிரிழந்தனர். அதே சமயம் 2020ஆம் ஆண்டு கொரோனா பேரிடர் கால பொதுமுடக்கம் காரணத்தினால் சாலை விபத்துக்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 7,287 ஆக குறைந்து உள்ளது. இவ்வாறான சாலை விபத்துக்கள் பொதுவாக கவனக்குறைவினால் தான் ஏற்படுகிறது அதற்கு அதிக காரணமாக இருப்பது கைப்பேசி தான்.

 


 

இவ்வாறான நிகழ்வுகள் உலகம் முழுவதும் நிகழ்ந்து கொண்டு தான் உள்ளது. இதைப்பற்றி காவல்துறையோ அரசாங்கமோ எச்சரித்தாலும் அதனை கேட்காமலும் பொருட்படுத்தாமலும் நிறைய பெயர் இவ்வாறு வாகனத்தில் செல்கின்றனர் இதனால் பல்வேறு விபத்துகள் நடைபெறுகிறது. இவ்வாறு செய்வதனால் தவறு செய்தவர் மட்டுமல்லாமல் எந்த ஒரு தவறும் சக பயணிகளும், பொதுமக்களும் கூட பாதிக்கப்படுகின்றனர். பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் ஒரு சில பேர் உயிரிழந்து உள்ளனர் இருந்தாலும் இதனை சற்றும் சிந்திக்காமல் இவ்வாறு கைபேசியை பயன்படுத்திக் கொண்டே வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதமும் அதிகமான தண்டனையும் வழங்க வேண்டும் என்பது சாமானியர்களின் கருத்தாக உள்ளது. சாலையில் செல்லும்போது வரும் செல்போன் அழைப்பை ஏற்பாதீர்கள், உங்களை அழைப்பது எமனாக கூட இருக்கலாம்.