செங்குன்றம் பேருந்து நிலையம்) மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதால் நாளை முதல் புழல் ஏரி அருகே இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என்று மாநகர போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.
செங்குன்றம் பேருந்து நிலையம்:
செங்குன்றம் அண்ணா பேருந்து நிலையத்தில், சுமார் 2.50 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டு பணிகள் நடைப்பெற்று வருகின்றது. இதையடுத்து, மேலும், புழல் ஏரிக்கரை எதிரே தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கும் பணியும், சமீபத்தில் முடிக்கப்பட்டு பேருந்து கண்காணிப்பாளர் அறை மற்றும் கழிப்பறைகளும் கட்டப்பட்டுள்ளன. தற்காலிக பேருந்து நிலையம் எப்போது செயல்பாட்டுக்கு வரும் என்று மக்கள் காத்திருந்தனர்
எம்.டி.சி அறிக்கை:
இந்த நிலையில் தற்காலிக பேருந்து நிலையம் குறித்து மாநகர போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் (செங்குன்றம் பேருந்து நிலையம்) மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதால், 24.06.2025 அன்று முதல் புழல் ஏரி எதிர்புறம் உள்ள சாமியார் மடம் காலி மைதானத்திலிருந்து இயக்கப்பட உள்ளது.
அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் (செங்குன்றம் பேருந்து நிலையம்] ரூ.250 இலட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதால் இப்பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்ட 36 வழித்தடங்கள், 202 பேருந்துகள் 24.06.2025 அன்று முதல் புழல் ஏரி எதிர்புறம் உள்ள சாமியார் மடம் காலி மைதானத்திலிருந்து இயக்கப்பட உள்ளது.
அதன்படி, திருவள்ளூர், பெரியபாளையம், கும்மிடிப்பூண்டி, புழல், Grand line மார்க்கமாக வரக்கூடிய பேருந்துகள் தற்காலிகமாக மாற்றி அமைக்கப்பட்ட சாமியார் மடம் காலி மைதானத்திற்கு வந்து பயணிகளை இறக்கி/ஏற்றி செல்லும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
பேருந்துகளின் தடம் எண் விவரம் அட்டவணை கீழ்வருமாறு
| வ.எண். | மார்க்கம் | வழித்தடம் எண் |
| 1 | திருவள்ளூர் மார்க்கம் | 628, 61R, 65H, 505, 505K |
| 2 | பெரியபாளையம், கும்மிடிப்பூண்டி மாக்கம் | 512, 547, 557, 557A extn, 557C, 557M, 558A, 5588, 558C, 558P, 592, 593 cut, |
| 3 | புழல் மார்க்கம் | 113, 114, 1144, 242, 57, 157, 157E, 62, 62A, 62cut, 104, 104K, 570, 57C cut, |
| 4 | Grand line, அருமந்தை மார்க்கம் | 57E, 576, 36K, 36V, 58V |