பாஜக உயர்மட்ட குழு கூட்டம்

Continues below advertisement

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜக உயர்மட்டக்குழுக் கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை , பாஜக தேசிய செயலாளரும் தமிழக மேலிட பொறுப்பாளருமான அரவிந்த்மேனன், பாஜக தேசிய இணைப் பொறுப்பாளர்கள் சுதாகர் ரெட்டி, பாஜக மாநில முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டம் முடிந்த பிறகு , பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

Continues below advertisement

என்னுடைய யாத்திரை ஜனவரி 9 நிறைவடைய இருக்கிறது. அதன் பிறகு பிரதமர் மோடி அல்லது அமித்ஷாவின் நேரம் கேட்டு தமிழகம் அழைக்க திட்டமிட்டுள்ளோம். 

சமீபத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில் தமிழகத்தில் இன்று பாஜக உயர்மட்டக்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

இது எந்தளவிற்கு முக்கியமான கூட்டமாக பார்க்கப்படுகிறது என்ற கேள்விக்கு

நாளைக்கு தேர்தல் வந்தாலும் சந்திக்க தயாராக உள்ளோம்.

அந்தளவிற்கு கூட்டணி வலுவாக இருக்கிறதா பார்க்கப்படுகிறதா என்ற கேள்விக்கு ? 

நீங்க ஏன் முதல்வர் ஸ்டாலினை பார்த்து உங்கள் கூட்டணி வலுவாக இருக்கிறதா என்று ஒரு நாள் கூட கேட்பதில்லை ? 

திமுக யாருடன் கூட்டணி இருந்தாலும் மக்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டுமா ?

5 ஆண்டு கால ஆட்சியில் சொத்துவரி , மின்கட்டணம் , பாலியல் குற்றச் சாட்டுக்கள் அதிகரித்துள்ளது. 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொலைகள் நடைபெற்றுள்ளது. 10 முதல் 70 வயது பெண்கள் ரோட்டில் நடமாட முடியவில்லை. கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழப்பு , எங்கு பார்த்தாலும் கஞ்சா போன்ற போதை பொருட்கள் நடைமுறையில் இருந்து வருகிறது.

இதெல்லாம் மறந்து விட்டு திமுக ஆட்சியை மக்கள் அங்கீகரிப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் ?  தேர்தல் பொறுப்பாளர்கள் , பியூஸ் கோயல் , அர்ஜூன் ராம் மேக்வால் மற்றும் முரளிதர் மோஹோல் ஆகியோர்  23 ஆம் தேதி தமிழ்நாடு வருவதாக இருக்கின்றது.