கோவில் நகரம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் மாநகராட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பல்வேறு கோவில் ஸ்தலங்கள் இருக்கிறது. இதில் கோவிலுக்கு சொந்தமான குளங்கள் உள்ளது.
குறிப்பாக தாயார் அம்மன் குளம், ஓபி குளம், சர்வ தீர்த்த குளம், ரங்கசாமி குளம், அஷ்டபுஜ பெருமாள் கோவில் குளம், பொய்கை ஆழ்வார் குளம், 50 ஆண்டுகளுக்கு மேலாக வைகுண்ட பெருமாள் கோவில் குளத்திற்கு நீர்வழிப் பாதைகளை பொதுமக்கள் அடைத்து விட்டு இருந்தனர்.
அதனை தற்போது மாநகராட்சி சார்பில் அந்த பாதையை கண்டுபிடித்து குலத்திற்கு வழிவகை செய்துள்ளனர். இதன் காரணமாக வற்றி இருந்த குளத்தில் நீர் தற்பொழுது தொடர் மழையின் காரணமாக காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கோவில் குளங்கள் நிரம்பி உள்ளன. இதனால் கோவில் வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து நிரம்பி வருவதால் காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வானிலை தகவல்
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக,
03.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
04.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
05.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சிவகங்கை, மதுரை, விருதுநகர், தென்காசி, தேனி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
06.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், இராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.