சென்னையில் பெரம்பூர் பகுதியில் திறந்திருந்த பாதாள சாக்கடை கால்வாயில் இருந்து இளம்பெண் ஒருவர் பாதசாரிகளால் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


தமிழ்நாட்டில் 5 நாட்கள் மழை நீடிக்கும்  என  சென்னை  வானிலை  ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் தமிழ்நாட்டில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து 3 வது நாளாக விடிய விடிய மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளது. பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு நடந்து செல்கின்றனர்.


சென்னையில் பெரம்பூர் பகுதியில் திறந்திருந்த பாதாள சாக்கடை கால்வாயில் இருந்து இளம்பெண் ஒருவரை பாதசாரிகளால் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெரம்பூர் அருகே பட்டாளம் பகுதியைச் சேர்ந்த 24 வயதான ப்ரீத்தி, நேற்று புதன்கிழமை, எக்ஸ்பிரஸ் அவென்யூ மால் அருகே வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது பேரக்ஸ் சாலை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். இடைவிடாது பெய்த மழையைத் தொடர்ந்து அந்த சாலை வெள்ளத்தில் மூழ்கியதால், சாலையில் இருந்த ஒரு பாதாள சாக்கடையில் அந்த பெண்  விழுந்தார்.


வேலைக்கு செல்லும் போது அந்த குழி இருப்பது தெரியாமல், மழை நீர் தேங்கி இருந்தது. நடந்து சென்று கொண்டிருந்த ப்ரீத்தி அதை கவனிக்க தவறி, பாதாள சாக்கடை குழியில் விழுந்தார். அப்போது அங்கிருந்த பாதசாரிகள் உடனடியாக விரைந்து அந்தப்பெண்ணை தூக்கி சென்று உதவி வழங்கினர். 


எனினும், பாதசாரிகள் மற்றும் அருகில் இருந்தவர்கள் இந்த சம்பவத்தை கவனித்து அவருக்கு உதவி செய்தனர். முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். திரு.வி.க.நகர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பி.சிவக்குமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டனர்.


ப்ரீத்தியுடன் நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து, GCC அதிகாரிகள் பேரக்ஸ் சாலையில் தடுப்புகளை வைத்து, பாதாள சாக்கடைகளை மூடிவிட்டனர், மேலும் மழைநீரை வெளியேற்ற ஒரு தண்ணீர் லாரி நிறுத்தப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத் துறையினரால் தோண்டப்பட்ட தடுப்பு இல்லாத மழைநீர் வடிகால் குழியில் விழுந்து இளம் பத்திரிகையாளர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவங்களை அடுத்து, வரும் வாரங்களில் அதிக மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளதால் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை தடுக்குமாறு பெருநகர சென்னை மாநகராட்சிக்கு (ஜிசிசி) பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


தமிழ்நாடு வெதர்மேன் என்று அழைக்கப்படும் வானிலை பதிவர் பிரதீப் ஜான் கூறுகையில், கடந்த இரண்டு நாட்களில் சென்னையில் அதிகபட்சமாக திரு வி கா நகரில் 346.5 மிமீ மழை பெய்துள்ளது. தொடர்ந்து திருவொற்றியூரில் கடந்த இரண்டு நாட்களில் 324.0 மி.மீ மழை பெய்துள்ளது. கத்திவாக்கம் மற்றும் மணலி புதுநகரில் முறையே 317.1, 314.3 மி.மீ., மழை பெய்துள்ளது. இதற்கிடையில், நுங்கம்பாக்கம் 72 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக  அதிக அளவு மழை பதிவாகியுள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் (ஆர்எம்சி) தலைவர் டாக்டர் எஸ் பாலகிருஷ்ணன் கூறுகையில், நுங்கம்பாக்கத்தில் 8 செ.மீ மழை பெய்துள்ளது, இது 30 ஆண்டுகளில் இல்லாத அளவு மழையாகும்.