மது அருந்துவதை கைவிட்டு கடனை அடைத்த நண்பருக்கு போஸ்டர் அடித்து நண்பர்கள் வாழ்த்து தெரிவித்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


கைவிடப்பட்ட மதுப்பழக்கம்:


திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் சிறியதாக உணவு கடை நடத்தி வருகிறார்.  அவர் குடிப்பழக்கத்துக்கு ஆட்பட்டு சிரமத்துக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. இதனால் தினசரி செலவுக்கு கூட பணம் இல்லாது, குடிப்பழக்கத்தால் மேலும் கடனுக்கு பணம் வாங்கியுள்ளார்.


இதையடுத்து, அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் குடிப்பழக்கத்தை விடுமாறு அழுத்தம் கொடுத்ததை தொடர்ந்து, குடிப்பழக்கத்தை விட முயற்சித்திருக்கிறார். அதையடுத்து, 3 மாதங்களுக்கு மேலாக குடிப்பழக்கத்தை நிறுத்தியதன் விளைவாக, அவர் 80, 000 ரூபாய் கடனை அடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.


போஸ்டர் அடித்த நண்பர்கள்:


இதையடுத்து சிவக்குமார் மது பழக்கத்தை கைவிட்ட 100வது நாளில் போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளனர். அதில் தெரிவித்துள்ளதாவது, தொழில் அதிபரும், தமிழ்நாடு காற்றாலை சங்க தலைவருமான சிவக்குமார், வெற்றிகரமாக 100வது மது அருந்தவில்லை என குறிப்பிட்டுள்ளனர். இது குறித்து நண்பர்கள் தெரிவித்ததாவது, நண்பரின் முயற்சியை பாராட்டும் வகையில் இந்த போஸ்டரை அடித்து வாழ்த்து தெரிவித்துள்ளோம் என தெரிவித்தனர்.