சென்னையில் விதிகளை மீறி வாகன நம்பர் பிளேட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


கடந்த மாதம் நடந்த தணிக்கையில் சரியான பதிவு எண்கள் இல்லாத 6,170 வாகன ஓட்டிகளுக்கு போலீசார் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். விதிகளை மீறி வாகன நம்பர் பிளேட்களை விற்பனை செய்த 138 கடைகளுக்கு போக்குவரத்து அதிகாரிகள் எச்சரிக்கை செய்துள்ளனர்.