சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 


தொழிற்சங்கம் தொடங்க அனுமதி, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக காவல்துறையினர் அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்தனர்.


களத்தில் குதித்த கம்யூனிஸ்டுகள்:


தொழிற்சங்கம் தொடங்க சாம்சங் நிறுவனம் அனுமதி வழங்க வேண்டும், ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும், எட்டு மணி நேர வேலையை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் உள்ள சாம்சங் நிறுவனத்தில் பணிபுரியும் சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் கடந்த நான்கு வார காலத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.


சாம்சங் தொழிலாளர் சங்கத்தை தாமதமின்றி பதிவு செய்து உடனடியாக சான்றிதழ் வழங்கிடவும், வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர தமிழ்நாடு முதலமைச்சர் தலையீடு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிபிஎம், சிபிஐ, சிபிஐ (எம்.எல்) சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் ஆர்பாட்டம் நடைபெற்றது.


 






சாம்சங் தொழிலாளருக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட சிபிஎம் மற்றும் சிபிஐ மாநில செயலாளர்கள் கே பாலகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்டோரை அனுமதி இன்றி போராட்டம் நடத்தியதாக காவல்துறையினர் கைது செய்தனர்.


இதையும் படிக்க: ஈரான் - இஸ்ரேல்: ஒரு காலத்தில் தோழர்கள், தற்போது பரம எதிரி: இடையில் அமெரிக்கா எப்படி? இந்தியா யார் பக்கம்.?