✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Pink Auto: சென்னையில் வருகிறது பிங்க் ஆட்டோ- அமைச்சர் அறிவிப்பு! யார் அந்த 200 பெண்கள்?

செல்வகுமார்   |  22 Jun 2024 07:25 AM (IST)

Chennai Pink Auto: சென்னையில் உள்ள 200 பெண்களை தேர்வு செய்து ரூ. 1 லட்சம் மானியம் வழங்கும் பிங்க் ஆட்டோ திட்டம் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

மகளிருக்கு பிங் ஆட்டோ

வாகனம் ஓட்ட உரிமம் பெற்ற, ஆர்வமுள்ள சென்னையில் உள்ள 200 பெண்களை தேர்வு செய்து ரூ. 1 லட்சம் மானியம் வழங்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார். 

சட்டப்பேரவை கூட்டத்தொடர் :

கடந்த பிப்ரவரி மாதம் 19, 20 ஆகிய தேதிகளில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பட்ஜெட் மீதான விவாதமானது பிப்ரவரி 22ஆம் தேதி வரை மட்டுமே நடைபெற்றது. மக்களவைத் தேர்தல் காரணமாக, மானியக் கோரிக்கைகள் தொடர்பான விவாதமானது நடத்தப்படாமல், சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் பாகமானது,  ஜூன் 19 ஆம் தேதி முதல் ஜூன் 29ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

பெண்களுக்கு பிங்க் ஆட்டோ: 

இந்நிலையில், இன்று மாலை நடைபெற்ற மானியக் கோரிக்கையின், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பை வெளியிட்டார். 

அவர் தெரிவித்த அறிவிப்பில், சென்னையில் உள்ள 200 பெண்களை தேர்வு செய்து ரூ. 1 லட்சம் மானியம் வழங்கும் பிங்க் ஆட்டோ திட்டம் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டமானது, சென்னை மாநகரத்தில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் விதமாகவும், பெண்களுக்கான சுய தொழில் வாய்ப்பினை உருவாக்கும் விதமாகவும், அரசு மானியமாக தலா ரூ. 1 லட்சம் வீதம் 200 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மானியம் வழங்கி 2 கோடி செலவில் 200 இளஞ் சிவப்பு ஆட்டோக்களை இயக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

வாகனம் ஓட்டுவதில், உரிமம் பெற்ற ஆர்வமுள்ள 200 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு, 1 லட்சம் மானியம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் , இதர நிதி பெறும் வகையில் வங்கிகளிடம் கடன் பெறும் வகையில் இணைக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

Published at: 22 Jun 2024 07:25 AM (IST)
Tags: TN assembly @chennai Pink Auto
  • முகப்பு
  • செய்திகள்
  • சென்னை
  • Pink Auto: சென்னையில் வருகிறது பிங்க் ஆட்டோ- அமைச்சர் அறிவிப்பு! யார் அந்த 200 பெண்கள்?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.