இளைஞரிடம் 20 லட்சம் ரூபாய் பறித்த மும்பையை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர்

Continues below advertisement

சென்னை அசோக் நகரை சேர்ந்தவர் சந்தோஷ் ( வயது 33 ) இவர் கடந்த ஆண்டு, அடையாறு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது ; 

கடந்த 2024 - ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மும்பையில் உள்ள ஒரு கூரியர் நிறுவனத்தின் பெயரை கூறி மொபைல் போனில் தொடர்பு கொண்ட நபர், என் ஆதார் எண்ணை வைத்து முன்பதிவு செய்த ஒரு பார்சல் வந்துள்ளதாக கூறினார்.

Continues below advertisement

பார்சலில் காலாவதியான பாஸ்போர்ட்டுகள், கிரெடிட் கார்டுகள், துணி, தடை செய்யப்பட்ட  மருந்துகள் இருப்பதாகவும், அவை பயங்கரவாதிகளுக்கு பயன்படுத்த அனுப்பியதால் , மும்பை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் கூறினார்.

இவ்வழக்கில் இருந்து விடுவிக்க, மர்மநபர் பணம் கேட்டார். பணம் இல்லாததால், தனியார் வங்கியில் தனிநபர் கடன் பெற்று, 20 லட்சம் ரூபாயை அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தேன். அதன் பின் தான் நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன். பணத்தை மீட்டு தர வேண்டும் என இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

சைபர் கிரைம் போலீசார் விசாரணையில் , இந்த மோசடி வழக்கில் ஈடுபட்டவர்கள், மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தை சேர்ந்த நரேஷ் கல்யாண் ராவ் ஷிண்டே ( வயது 20 ) ஸ்ரீகாந்த் சுரேஷ்ராவ் கத்கர் ( வயது 34 ) என்பதும் அவர்கள் மும்பையில் இருப்பதும் தெரிந்தது.

மும்பை சென்ற போலீசார், இருவரையும் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்கள் மீது ஏற்கனவே தாம்பரம் சைபர் கிரைம் போலீசில் இதே போன்ற வழக்கு நிலுவையில் உள்ளது.

அடமானம் வைக்க கொடுத்த காரை திருப்பி தராதது குறித்து ஏற்பட்ட தகராறு - இருவரை காரில் கடத்தி தாக்கிய மூவர்

சென்னை வாணுவம் பேட்டையைச் சேர்ந்தவர் சரவணன் ( வயது 33 ) இவர், தன் நண்பர் சிவகுமாரிடம்,  காரை அடமானம் வைத்து 2 லட்சம் ரூபாய் பெற்றுத் தரும் படி கேட்டுள்ளார்.

சிவகுமார் தனக்கு தெரிந்த நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த கண்ணன் ( வயது 53 ) என்பவர் மூலம், கன்னியாகுமரியைச் சேர்ந்த பின்னி என்பவரிடம் கொடுத்து, 2 ரூபாய் லட்சம் பெற்றுள்ளனார்.

அதில், சிவகுமார் ஒரு லட்சம் எடுத்துக் கொண்டு சரவணிடம் 1 லட்சம் ரூபாயை கொடுத்துள்ளார். நான்கு மாதம் கழித்து காரை திருப்பி கேட்ட போது வட்டி தராததால் காரை விற்று விட்டேன் என பென்னி கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

சரவணன் தன் நண்பர்களுடன், சிவக்குமார் மற்றும் கண்ணனை திருவல்லிக்கேணியில் உள்ள மதுக் கூடத்திற்கு, இதுதொடர்பாக பேச வரவைத்துள்ளனர். அப்போது இரு தரப்பு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

ஆத்திரமடைந்த சரவணன் தரப்பு, சிவகுமார் மற்றும் கண்ணனை காரில் கடத்தியது. அப்போது கண்ணனுடன் வந்திருந்த அரவிந்தன் என்பவர், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

விசாரித்த திருவல்லிக்கேணி இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசாரன அயோத்திய குப்பம் பகுதியில் காரை மடக்கி அதிரடியாக இருவரையும் மீட்டனர். கடத்தலில் ஈடுபட்ட சரவணன் ( வயது 33 ) சிவானந்தம் ( வயது 45 ) முரளி ( வயது 39 ) ஆகிய மூவரை கைது செய்தனர்.