சென்னை பசுமை விமான நிலையம் ( Chennai Parandur Airport )


சென்னையில் இரண்டாவது விமான நிலையத்திற்காக பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு மற்றும் அதை ஒட்டியுள்ள மொத்தம் 13 கிராமங்களில் இருந்து சுமார் 4800 -க்கும் அதிகமான ஏக்கர் பரப்பிலான நிலத்தை கையகப்படுத்த அரசு முடிவு செய்திருக்கிறது. இந்த திட்டத்திற்கான மதிப்பு சுமார் 20,000 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. இதில் சுமார் 3000 ஏக்கர் அளவிற்கு, பட்டா நிலங்களாகவும், மீதம் உள்ள நிலங்கள் அரசு நிலமாகவும் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு ஆகிய கிராமங்களில் பெரும்பாலும் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்கள் முழுமையாக கையகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமான நிலையம் அமைய உள்ள பகுதியில், ஏரி, குளம், கால்வாய் என ஏராளமான நீர்நிலைகள் உள்ளன. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


தொடர் போராட்டம்


இந்த அறிவிப்பை தொடர்ந்து 13 கிராம மக்கள் தொடர்ந்து 456 வது நாளாக பல்வேறு விதமான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஐந்து முறை கிராம சபை கூட்டத்தில் கலந்து ஒரு விமான நிலையம் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானத்தை நிறைவேற்றியும், 3 முறை கிராம சுப கூட்டத்தை புறக்கணித்தும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.


பெரும் பரபரப்பு 


தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்கள் கடந்த இரண்டு முறை ஐஐடி பேராசிரியர் குழு மச்சேந்திரநாதன் தலைமையில் குழுவினர் இரண்டு முறை பரந்தூர் பகுதியில் ஆய்வு சென்று வந்த நிலையில் அவரை சந்திக்க பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரியிருந்தனர். இந்த நிலையில் இதனால் வரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்காத காரணத்தால் இன்று பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக்கார குழுவினர் 20க்கும் மேற்பட்டோர் திடீரென மாவட்ட ஆட்சியரை சந்திக்க இன்று வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் 1/2 -மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற கூட்டத்தில் முடிந்து வெளியே வந்து செய்தியாளர் சந்தித்த போராட்டக்கார குழுவினர் : நீர்நிலைகள் அழிப்பதால் ஏற்படும் பாதிப்பு குறித்து விமான நிலையம் அமைந்தால் பொதுமக்கள் எவ்வாறு பாதித்து அடைவார்கள் என்பது குறித்து ஐஐடி பேராசிரியர் குழு மச்சேந்திரநாதன் சந்திக்க பலமுறை நேரம் கேட்டு கொடுக்காததால் இன்று மாவட்ட ஆட்சியர் சந்தித்து பேசியதில் நாளை சென்னையில் பேராசிரியர் குழுவிடம் ஆலோசனை ஏற்பாடு செய்வதாக மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தார்.


மேலும் தொடர்ந்து 456 வது நாளாக போராட்டம் நடத்தி வரும் மக்கள் பற்றி மாநில அரசுக்கு மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்தீர்களா இல்லையா, இந்த போராட்டத்தால் ஆளும் கட்சியின் இருக்கும் தேர்தல் நேரங்களிலும் பாதிப்பு ஏற்படும் என பல்வேறு கேள்விகள் எழுப்பினோம். தொடர்ந்து அரசுக்கு தெரிவித்து வருகிறோம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் எனவும், இது போன்ற போராட்டங்கள் நடைபெற்றால் மாநில அரசுக்கும், தேர்தலுக்கும் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கோரிக்கை முன்வைக்க உள்ளோம். இந்த திட்டத்தை நிறைவேற்றினால் என்னென்ன பாதிப்பு உண்டாகும் என்ற அனைத்து ஆவணங்களும் உள்ளது அடுத்து சட்ட போராட்டம் நடத்தவும் தயாராக இருப்பதாக போராட்ட குழுவினர் தெரிவித்தனர்