ஸ்ரீலங்காவின் ஸ்ரீலங்கன் ஏர்வேஸ் சென்னை விமான நிலையத்திலிருந்து மதியம் 12 மணி அளவில் கொழும்புக்கு சென்றது. அந்த விமானத்தில் காஷ்மீர் துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு சம்பந்தமானவர்கள் பயணம் செய்ததாக சென்னை விமான நிலையத்திற்கு தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து இந்திய அரசாங்கம் உடனடியாக தகவலை பரிமாறியது.

வெளியான பரபரப்பு தகவல்

இதனைத் தொடர்ந்து உடனடியாக இது தொடர்பான தகவல் சம்பந்தப்பட்ட விமான நிலையம் மற்றும் விமான நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அதிகாரிகள் விரைந்து விமானத்தில் முழுமையாக பரிசோதனை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து இந்த விமானம் சிங்கப்பூர் செல்ல வேண்டிய நிலையில் பரிசோதனை காரணமாக சிங்கப்பூருக்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து அதில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் உயர் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும் செய்தி குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பஹல்காம் தாக்குதல் பிண்ணனி என்ன ?

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை(NIA) விசாரித்து வருகிறது. ஏற்கனவே, 1,500 பேரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியான நிலையில், தற்போது, இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ(ISI)-க்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.

பாகிஸ்தான் உளவு அமைப்பிற்கு தொடர்பு

இந்நிலையில், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-க்கு உளவு பார்த்து தகவல்களை அளித்து வந்த பதான் கான் என்பவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவர், ராஜஸ்தானின் ஜெய்சல்மாரில் வசித்துவந்த நிலையில், அங்கு சென்ற என்ஐஏ அதிகாரிகள் அவரை கைது செய்தனர். இவர், 2013-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சென்றபோது, அவரை தொடர்புகொண்ட அந்நாட்டு உளவுத்துறையினர், பணம் தருவதாக ஆசை காட்டி, இந்தியா குறித்த தகவல்களை சேரித்து தருமாறு கேட்டுள்ளனர்.

பணத்தாசையால் பதான் கான் அதற்கு ஒப்புக்கொண்டு, பாகிஸ்தான் உளவுத்துறையின் கையாளாக மாறியுள்ளார். அவருக்கு, தகவல்களை சேகரிப்பது குறித்த பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. பின்னர் இந்தியா திரும்பிய பதான் கான், அவ்வப்போது பாகிஸ்தானுக்கு சென்று, உளவுத் தகவல்களை பரிமாறி வந்ததாக தெரிகிறது. பதான் கான் வசித்து வந்த ஜெய்சல்மார் பாகிஸ்தானின் சர்வதேச எல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக, என்ஐஏ இதுவரை 2,500 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளது. அதில், 186 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.