பல்வேறு இடங்களில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்
தென்மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் படையெடுக்க துவங்கியதால், வட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக சென்னை திருச்சி பிரதான சாலையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசலால் நெடுஞ்சாலை சிக்கி தவித்தது. விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதே போன்று செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசலில் கட்டுக்குள் கொண்டு வர 8 கவுன்டர்கள் அமைக்கப்பட்டு சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டது.
இதேபோன்று செங்கல்பட்டு அடுத்துள்ள பரணூர் சுங்கச்சாவடி பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் அவ்வப்போது ஏற்பட்டது. போக்குவரத்தை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் சிங்கப்பெருமாள் கோவில் ,கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலை கண்காணிக்கவும் கட்டுக்குள் கொண்டு வரவும் சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் 2000-க்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நள்ளிரவில் சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் பெய்த கனமழையும் வாகன ஓட்டிகளை பெரிதும் பாதித்தது.