சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை செம்பரம்பாக்கம் அருகே பின்னால் வந்த பேருந்து ஒன்று மோதியதில் பயணிகளுடன் சென்ற ஆம்னி பேருந்து ஒன்று தீப்பிடித்தது.


பூந்தமல்லி - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை


கோயம்பேட்டிலிருந்து நோக்கி பெங்களூர் சென்று கொண்டிருந்தது பூந்தமல்லி - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை பூந்தமல்லி அடுத்த பாப்பான்சத்திரம் அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் பயணிகளை ஏற்றி ஆரனி நொக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஆம்னி பேருந்தின் பின்பகுதியில் மோதியது.


அலறி அடித்து ஓடிய பயணிகள்


மோதிய வேகத்தில் ஆம்னி ஈ பஸ்சின் ( மின்சாரத்தில் இயங்கக்கூடிய பேருந்து )   பின் பகுதி நொறுங்கிய நிலையில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை கண்டதும் பஸ்ஸில் பயணம் செய்த பயணிகள் அலறி அடித்தபடி வெளியே ஓட்டம் பிடித்தனர். மேலும் பஸ்சை இயக்கிய டிரைவரும், பொதுமக்களும் சேர்ந்து எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர் தீயானது கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்ததால் அந்த பகுதி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சாலையில் சென்று கொண்டு இருந்த தண்ணீர் லாரியில் இருந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்


பேருந்து முழுவதும் தீ வேகமாக பரவியது


ஆனால் தீ மள, மளவென எரிந்ததால் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் இருங்காட்டுக்கோட்டை தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரோடு ரசாயனம் கலந்த பவுடரை கலந்து எரிந்து கொண்டிருந்த தீயை அனைத்தனர் இதில் பஸ் முழுவதும் தீயில் எரிந்து எலும்பு கூடானது பின்னர் சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார் சாலையில் எரிந்த நிலையில் எலும்பு கூடாக கிடந்த ஆம்னி பேருந்தை அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.


தீ விபத்தால் கடும் போக்குவரத்து நெரிசல்


காலை நேரம் என்பதால் வேலைக்கு செல்பவர்கள் கல்லூரிகளுக்கு செல்பவரும் அதிகளவில் இந்த சாலையை பயன்படுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆம்னி ஈ பேருந்தில் பின்பகுதியில் வாகனத்தின் அனைத்து உபகரணங்களும் இருந்ததால் தனியார்  பேருந்து மோதிய வேகத்தில் ஆம்ணி ஈ பேருந்து தீப்பிடித்து எரிந்தது தெரியவந்தது.


அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை


இந்த தீபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை இந்த பகுதியில் அதிக அளவில் தனியார் கல்லூரிகள் இருப்பதால் கல்லூரிக்கு நேரமானதை அறிந்த கல்லூரி பேருந்து டிரைவர்கள் சாலையின் எதிர் திசையில் சென்றதால் இரண்டு பகுதிகளிலும் வாகனங்கள் செல்ல முடியாமல் அப்படியே போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டதால், இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசலும் பரபரப்பும் ஏற்பட்டது.