1. தமிழ்நாடு அரசின் BELL 412 EP ரக ஹெலிகாப்டரை பராமரிக்க டெண்டர் வெளியிடப்படுகிறது. இந்த ஹெலிகாப்டர் 2019 முதல் பயன்படுத்தப்படாமல் உள்ளது. இந்த ஹெலிகாப்டரை ஏர் ஆம்புலன்ஸாக மாற்ற அரசு திட்டமிட்டிருந்த நிலையில் முதற்கட்டமாக அதனை பராமரிக்க டெண்டர் வெளியாக உள்ளது.
2. சென்னை உயர் நீதிமன்றத்தின் காணொலிக் காட்சி மூலமான வழக்கு விசாரணையின்போது ஆபாசமாக நடந்து கொண்ட வீடியோவை பரவவிடாமல் தடை செய்ய வேண்டும் என்று அனைத்து சமூக வலைதள நிறுவனங்களுக்கும் சென்னை சைபர் கிரைம் போலீசார் கடிதம் அனுப்பியுள்ளனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை காணொலி காட்சி வாயிலாக நடந்து கொண்டிருக்கும்போது, வழக்கறிஞர் ஒரு பெண்ணுடன் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட காணொலி இணையத்தில் வெளியானது.
3. சென்னை கொரட்டூர், புளியந்தோப்பு, தரமணி ஆகிய இடங்களில், 1,750 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் 400 கிலோ வோல்ட் திறன் உடைய மூன்று நவீன துணை மின் நிலையங்களின் கட்டுமான பணிகள் விரைவுபடுத்தப்பட்டு உள்ளன.
4. சென்னை பொங்கலையொட்டி சென்னையில் இருந்து நெல்லை, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு மொத்தம் 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
5. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய 14 வகையிலான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு, கடுமையான நடவடிக்கைகளை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது
6. படிப்புகளில் சேராமல் இணையவழியில் தேர்வெழுதி பட்டம் பெறமுயன்ற 117 பேரின் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய சென்னை பல்கலை.
7. தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில் மின்னணுப் பொருட்கள் மற்றும் ஆயத்த ஆடை உற்பத்தி தொழிற்சாலைகளின் மனித வள மேலாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கிண்டியில் உள்ள இயக்கக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.
8. விழுப்புரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உணவின்றி தள்ளு வண்டி ஒன்றில் சிறுவன் ஒருவன் உயிரிழந்ததாக வெளிவந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
9. திருவள்ளூர் கல்லூரி மாணவர் கொலையின் பின்னணியில், 10-ம் வகுப்பு பயிலும் மாணவிகள் இருவரை போலீஸார் விசாரித்து வருகின்றனர். முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அசோக் (21) ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். ஆபாச படங்களை வைத்து மிரட்டியதால் இன்ஸ்டாகிராம் நண்பர் மூலம் கூலிப்படை வைத்து கொலை செய்தது அம்பலம்.
10. பால்வாடி படிக்கும்போது வாங்கிக்கொடுத்தேன் பூந்திய , எட்டாவது பாசாயிட்டு எடுக்க வச்சேன் வாந்திய.. என்று பாடிய கானா பாடகர் சரவெடி சரண் மீது திருவள்ளூர் போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவரை கைது செய்ய தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்