வங்கக் கடலில் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டு வருகிறது. வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டதன் படி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும்,காஞ்சிபுரம் மாவட்டத்திலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

 



தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர், மு.க.ஸ்டாலின் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கும், அனைத்து துறை அதிகாரிகளுக்கும், உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழை இன்னும் தீவிரமடையும் என சென்னை வானிலை மையம் தொடர்ந்து அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.



 

தமிழக அரசின் உத்தரவினை தொடர்ந்து காஞ்சிபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கனமழையின் காரணமாக கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக மீட்பு பணிக்கு உதவிடும் வகையில்,ரப்பர் படகுகள்,மரம் அறுக்கும் இயந்திரங்கள், ஜெனரேட்டர்கள், உயிர் காக்கும் மீட்பு உபகரணங்கள் உள்ளிட்ட  அனைத்து வகையான முன்னேற்பாடுகளுடன்  காஞ்சிபுரம் தீயணைப்பு மீட்பு பணிகள் துறை மாவட்ட அலுவலர் ஆர்னீஷா பிரியதர்ஷினி தலைமையில் மீட்பு படை வீரர்கள் தங்கள் வாகனங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.





வானிலை அறிவிப்பு 


இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.  கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


14.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.




15.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். 


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.  அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.




Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண