தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கடந்த மாதம் 29-ந் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதன் காரணமாக, சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் மழை கொடடித் தீர்த்து வருகிறது. இந்த நிலையில், நேற்று ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் விடிய, விடிய மழை கொட்டித் தீர்த்தது. தற்போதும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பதாக அந்த மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதேபோல, வேலூர் மாவட்டத்திலும் மழை நீடித்து வருவதால் அந்த மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் தலைநகரான சென்னையில் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய மழை பெய்ததால் சென்னை மாநகரம் முழுவதும் சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடியது. பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் இதுவரை வடியாததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.


 காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம்


காஞ்சிபுரம் மாவட்டம்  மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் ஆகியவை சென்னையின் புறநகர் மாவட்டங்களாக இருப்பதால் கடந்த 3 நாட்களாக கன மழை தொடர்ந்து பெய்து வருகிறது இந்நிலையில் நேற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்றும் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்


கனமழை பெறும் மாவட்டங்கள்:


கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று (நவம்பர்- 2) கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


சென்னை:


சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் உள்பட 8 மாவட்டங்களில் இன்று கன மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.சென்னையில் பெய்துவரும் கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்புப் பணிகளுக்கு தேசிய பேரிடர் மீட்புக்குழு தயாராக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், நாஇன்றுளை சென்னையில் கன மழை வாய்ப்பில்லை என,  மதியம் நேற்று வெளியிட்டுள்ள வானிலை மையம் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று சென்னையில் மிதமான மழை மட்டுமே பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் அதிகபட்சமாக திருவள்ளூர், செங்குன்றம் 13 சென்டிமீட்டர் பெரம்பலூரில் 12 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை தமிழக கடற்கரைப் பகுதிகள் மன்னார் வளைகுடா பகுதி மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதியில் மணிக்கு காற்றானது 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் அடுத்த ஓரிரு தினங்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்