காா் ஓட்டுநரின் அதிா்ச்சி திட்டம் !! ரூ.11 லட்சம் திருட்டு !! கொடுங்கையூா் போலீஸ் அதிரடி கைது
சென்னை கொடுங்கையூா் சீனிவாச பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அசோக் குமாா் (68). மண்ணடியில் அச்சகம் நடத்தி வருகிறாா். இவரது வீட்டின் பீரோவில் இருந்த ரூ.11 லட்சம் ரொக்கம் திருடப்பட்டதாக கொடுங்கையூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வந்தனா்.
சென்னை வியாசர்பாடி சோழன் நகரைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா ( வயது 20 ) இவர், வியாசர்பாடி எருக்கஞ்சேரி பிரதான சாலையில் உள்ள ரெஸ்டாரண்டில் பணிபுரிகிறார். ஐஸ்வர்யா பணியில் இருந்த போது, 35 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் வாய் பேச முடியாது என நன்கொடை கேட்டு கையில் வைத்திருந்த நோட்டீசை மேசையில் வைத்துள்ளார்.
பின் கையால் சைகை காட்டி கவனத்தை திசை திருப்பி , அருகில் இருந்த ஐஸ்வர்யாவின் மொபைல் போனை நோட்டீசிற்குள் மறைத்து வைத்து திருடி சென்றார். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை வைத்து எம்.கே.பி. நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
ரயில் நிலையம் அருகே நிறுத்து வைக்கப்பட்ட வாகனம் திருட்டு
சென்னை புளியந்தோப்பு பி.கே. காலனியைச் சேர்ந்தவர் கதிரேசன், கடந்த மாதம் 8 ம் தேதி பேசின் பாலம் ரயில் நிலையம் அருகே நிறுத்திய இவரது பைக் திருட்டு போனது. விசாரித்த பேசின் பாலம் போலீசார், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட அயனாவரம் பகுதியை சேர்ந்த விஜயகாந்த் ( வயது 47 ) என்பவரை கைது செய்தனர். ஓட்டேரி மேட்டு பாளையத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட பெரம்பூரைச் சேர்ந்த டைசன் ( வயது 31 ) ஓட்டேரியைச் சேர்ந்த ஆகாஷ் ( வயது 24 ) ஆகியோரை ஓட்டேரி போலீசார் கைது செய்தனர்.
உண்டியலை திருடிய சிறுவர்கள்
சென்னை புளியந்தோப்பு நெடுஞ்சாலை பகுதியில் உள்ள தர்காவில் அதிகாலையில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய புகாரின் படி, புளியந்தோப்பு காந்தி நகரைச் சேர்ந்த 16 வயது சிறுவர்கள் இருவரை புளியந்தோப்பு போலீசார் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பினர்.