வந்தே பாரத் ரயில்

Continues below advertisement

வேகமான, வசதியான மற்றும் நவீன பயணத்திற்காக இந்திய ரயில்வேயால் உருவாக்கப்பட்ட ஒரு அதிவேக விரைவு ரயில் தான் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ். இந்த ரயில்கள் ஏற்கனவே இருக்கும் ரயில்களை காட்டிலும், மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை கொண்டுள்ளன. இது மணிக்கு 180 கிமீ வேகத்தில் செல்லும் நாட்டின் அதிவேக ரயில் சேவையாகும். மேலும், இந்த ரயில் உள்நாட்டு தொழில்நுட்பத்தின் பெருமைமிக்க அடையாளகமாகவும் உள்ளது. இது இந்தியாவின் பொறியியல் உலகில் குறிப்பிடத்தக்க சாதனைகளில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.

2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி புதுடெல்லி ரயில் நிலையத்தில் புதுடில்லி மற்றும் வாரணாசி இடையே முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

Continues below advertisement

RAC டிக்கெட் இல்லை

புதிதாக அறிமுகமாக உள்ள வந்தே பாரத் ஸ்லீப்பர் எனப்படும் படுக்கை வசதி உள்ள ரயிலில், இனி ஆர்.ஏ.சி எனப்படும் பகுதியளவு இருக்கை உறுதியான டிக்கெட் வசதி இருக்காது. குறைந்த பட்ச கட்டணமாக மூன்றாம் வகுப்பு ஸ்லீப்பர் டிக்கெட்டுக்கு 960 ரூபாய் வசூலிக்கப்படும்' என, ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

நாடு முழுதும் பெரிய நகரங்களை இணைக்கும் 170 க்கும் மேற்பட்ட வழித் தடங்களில், வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. தமிழகத்திலும் கோவை, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட நகரங்களுக்கு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. தற்போது உள்ள ரயில்களில், அமரும் வகையிலான இருக்கை வசதி உள்ளது. இதற்கு பயணியர் இடையே கிடைத்த பெரும் வரவேற்பை தொடர்ந்து, 'வந்தே பாரத் ஸ்லீப்பர்' ரயில் எனப்படும் படுக்கை வசதி உடைய ரயில் தயாரிக்கப்பட்டது.

இதன் முதல் ரயில் , அசாமின் குவஹாத்தி மற்றும் மேற்கு வங்கத்தின் கொல்கட்டா இடையே இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலை, வரும் 17 - ல் பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைக்க உள்ளார்.

இந்நிலையில் , ரயில்வே வாரியம் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் தொடர்பான சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது ;

வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் குறைந்த பட்ச கட்டணமாக 400 கி.மீ.,க்கான கட்டணம் வசூலிக்கப்படும். இது அந்தந்த வகுப்புகளுக்கு ஏற்றபடி அமையும். ஏ.சி., முதல் வகுப்பு - 1,520 ரூபாய் , ஏ.சி., இரண்டாம் வகுப்பு -1,240 ரூபாய் , ஏ.சி., மூன்றாம் வகுப்பு - 960 ரூபாய் குறைந்த பட்ச கட்டணம் ஆகும். இந்த ரயிலில் ஆர்.ஏ.சி. எனப்படும் பகுதி அளவு இருக்கை உறுதியான டிக்கெட் வசதி கிடையாது என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.