வண்டலூர் உயிரியல் பூங்கா

 

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்து அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வண்டலூரில் அமைந்துள்ளது. இங்கு இரண்டாயிரத்திற்கும் அதிகமான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. இந்த பூங்காவில் வெள்ளைப் புலிகள் வங்க புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள், யானைகள், மனித குரங்கு காண்டாமிருகம், நீர்நாய், முதலைகள் உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் உள்ளது. பணியாளர்கள் தொடர்ந்து கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் விலங்குகளில் செயல்பாடு நடவடிக்கைகள் தொடர்ந்து 24 மணிநேரமும் பூங்கா அலுவலக ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர். வண்டலூர் பூங்கா நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு விலங்குகளுக்கும் தனித்தனி பராமரிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து விலங்குகள், மகிழ்ச்சியாக இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 



யானைகளுக்கான ‘கிரால்’

 

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் தற்சமயம் இரண்டு யானைகள் ரோகினி மற்றும் பிரக்ருதி பராமரிக்கப்பட்டு வருகின்றன. பூங்காவில் யானைகள் இருப்பிடம் 21 ஏக்கர் நிலப்பரப்பில், அமையப் பெற்றுள்ளது. ரெனால்ட் நிசான் தொழில்நுட்பம் மற்றும் வணிக மையம் இந்திய லிமிடெட், மகிந்திரசிட்டி, அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவின் யானைகள் இருப்பிட முழு கட்டமைப்பு வசதியை மேம்படுத்த ‘CSR’ ஆதரவை வழங்கியுள்ளது. இத்திட்டத்தில், யானைகளுக்கான ‘கிரால்’ கால்நடை மருத்துவ வசதிக்கேற்ப கட்டமைக்கப்பட்டுள்ளது.

 



அடிப்படை   தேவைகள்

 

 

 யானைகளுக்கு உணவு சமைப்பதற்கு ‘சமையலறை’, யானைகள் பராமரிப்பாளர்களுக்கு தங்கும் ‘வீடு’, யானைகள் குளிப்பதற்கு வசதியாக தண்ணீர் தொட்டி மற்றும் தண்ணீர் தெளிப்பான் (shower) மாற்றி புதுப்பிக்கப்பட்டுள்ளது. யானைகள் இருப்பிடங்களிலிருந்த புதர்கள், களைகள் அகற்றப்பட்டு, அகழி ஆழப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 2 ஏக்கர் அளவில் யானைகளுக்கான தீவண தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.



 

பயன்பாட்டுக்கு வந்தது

 

 

 அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு இன்று துணைத் தலைவர்o CSR- RNTBCI) ராமகிருஷ்ணன், மற்றும் கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் இயக்குநர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா,  சீனிவாஸ் ரா ரெட்டி,  வண்டலூர் ஆகியோர் முன்னிலையில் இன்று திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது. இந்நிகழ்ச்சியில் உயிரியல் பூங்காவின் துணை இயக்குநர், ஆர்.காஞ்சனா., உதவி இயக்குநர் பொ.மணிகண்டபிரபு, பூங்கா அலுவலர்கள் மற்றும் RNTBCI-ன் உயர் அதிகாரிகளான தகந்தன், DGM, CSR மற்றும்  சுப்பிரமணியன், துணை மேலாளர், CSR ஆகியோர் கலந்து கொண்டு  நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். தற்பொழுது எனக்காக அமைக்கப்பட்டுள்ள வாழ்விடம் , சிறப்பாக உள்ளதாகவும் இவை யானைகளுக்கு மிகவும் பிடிக்கும் என உங்க நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 



 








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண