ட்ரோன் விருதுகள்


இந்நிலையில், நேஷனல் ட்ரோன் விருதுகள் (National Drone Awards) வழங்கப்பட்டு வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) உடன் இணைந்து கருடா ஏரோஸ்பேஸ் வழங்கும் தேசிய ட்ரோன் விருதுகள் 2023 விழா இன்று நடைபெற்றது. சென்னை கிரவுன் பிளாசா ஹோட்டலில் மதியம் 2 மணி முதல் மாலை 4.30 மணி வரை தேசிய ட்ரோன் விருதுகள் 2023 விழா நடைபெற்றது. 


தேசிய ட்ரோன் விருதுகளின் முதன்மை விருந்தினர்களாக சிஎஸ்கே வீரர்களான சிவம் துபே, தீபக் சாஹர் மற்றும் டெவோன் கான்வே ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், புதிதாக உருவாக்கப்பட்ட ட்ரோன் தொழில் அமைப்புகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள், பாரத் ட்ரோன் அசோசியேஷன் (Bharat Drone Association), ஷனல் ட்ரோன் பைலட் அசோசியேஷன் ((National Drone Pilot Association) இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.




விருது வழங்கிய வீரர்கள்


இந்த விழாவில் இந்திய வளர்ச்சிக்கு பங்களித்த பல நபர்கள் மற்றும் நிறுவனர்களுக்கு தேசிய ட்ரோன் விருது 2023 வழங்கப்பட்டது. 16 பிரிவுகளின் கீழ் இந்த விருது வழங்கப்பட்டது. இந்த விருதுகளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சிவம் துபே, தீபக் சாஹர் மற்றும் டெவோன் கான்வே ஆகியோர்  வழங்கினர். 


அதன்படி, உற்பத்தி விருது (Manufacture award), சர்வீஸ் விருது (Service Award), ட்ரோன் அப்லிக்கேஷன் விருது (Drone Application Award), சாப்டுவர் விருது (Software Award), ஆர்பிடிஓ விருது(RPTO Award), சோஷியல் இப்பக்ட் (social impact awars), பிப்புள் சாய்ஸ் விருது (people choice award), அக்கடமியா விருது (acadamia award), ஸ்பெஷல் விருது (special awards), பிரைவேட் செக்டார் விருது (private sector award), பப்ளிக் செக்டார் விருது (public sector award), ஜெய் சவாண் ட்ரோன் விருது (jai jawan drone award) உள்ளிட்ட  16 விருதுகள் வழங்கப்பட்டன. 


ட்ரோன் பயன்பாடு


நாட்டில் ட்ரோன் தொழில்நுட்பம் அனைத்து துறைகளிலும் உருவெடுத்து வருகிறது. விவசாயத்துறையில் இதன் பயன்பாடு மிக முக்கிய பங்காக உள்ளது. விவசாயத்துறையில் பூச்சிமருந்து தெளித்தல் போன்ற பல்வேறு பணிகளுக்கு ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.


வேளாண்துறையில் ட்ரோன் தொழில்நுட்பப் பயன்பாடு உற்பத்தியை பெருக்கி, விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக உயர்த்தும். மேலும், விவசாயத்துறைக்கு மட்டுமல்லாமல் பாதுகாப்பு, சுற்றுலா, பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் ட்ரோன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க


Anbumani: பிளஸ் 2 முடிவுகள்; கடைசி 15 இடங்களில் 13 வட மாவட்டங்கள்; 35 ஆண்டாக இதே நிலை-  அன்புமணி வேதனை