"மு.க.ஸ்டாலின் ஆட்சி செய்யவில்லை சபரீசன்தான் ஆட்சி செய்கிறார்" - ஜெயக்குமார், அதிமுக..

கருத்து சுதந்தரத்திற்கு எதிராக அரசு இந்த அரசு செயல்படுகிறது, என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு

Continues below advertisement

காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட மாங்காடு பேரூராட்சியில் அதிமுக உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு மனுக்களை வழங்கினார் பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறுகையில் :

Continues below advertisement

”தமிழ்நாடு முழுவதும் அதிமுக உட்கட்சி இரண்டாம் கட்ட தேர்தல் நடந்து வருகிறது. ஒருங்கினைப்பாளர், இனை ஒருங்கிணைப்பாளர் தேர்தலில் பன்னீர்செல்வம், பழனிச்சாமி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மாங்காடு, வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகளில் 9 பொருப்புகளுக்கு தேர்தல் நடந்து வருகிறது. அதிமுகவை பொறுத்தவரை ஜெயலலிதா வாழ்ந்து மறைந்த இல்லம் நினைவிடம் ஆக்க வேண்டும் என சட்டம் இயற்றப்பட்டு நினைவிடம் ஆக்கப்பட்டு திறக்கப்பட்டது.


உயர்நீதிமன்றம் அந்த சட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஒப்படைத்திருக்கிறார்கள் மேல் முறையீடு சட்ட வல்லுனருடன் கலந்து ஆலோசித்து மேல் முறையீடு செய்யப்படும், அதற்கு முழு ஒத்துழைப்பு தீபா, தீபக் கொடுப்பதன் மூலம்தான் சிறப்பாக அமையும். ஜெயலலிதா வாழ்ந்து மறைந்த இல்லம் எங்களுக்கு கோவில் போன்றது என தெரிவித்தார். எதிர் கட்சியாக திமுக இருந்த போது பேசினார்கள். ததற்போது ஆட்சிக்கு எதிராகவும், மு.க. ஸ்டாலினுக்கு எதிராக பேசினால் வழக்கு போடுகிறார்கள். அறிவிக்கப்படாத மினி எமர்ஜென்சி தான்  நடந்து வருகிறது.  ஸ்டாலின் ஆட்சி செய்யவில்லை சபரீசன் தான் ஆட்சி செய்கிறார். கருத்து சுதந்தரத்திற்கு எதிரான அரசு இந்த அரசு செயல்படுகிறது.


திமுக ஆட்சியில் புதிய திட்டம் ஒன்றும் இல்லை, கட்டிய கட்டிடங்கள், பாலங்கள் எல்லாம் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது தான்.  பொட்டாஷ் உரம், கட்டுமான பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள், காய்கறி, மளிகை பொருட்கள் விலை உயர்ந்து விட்டது. ஆளுநர் அவரது அதிகாரத்திற்கு உட்பட்டு செயல்படுகிறார் அதில் மாற்று கருத்து இல்லை. திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதற்கும் குரல் கொடுக்கவில்லை, தமிழக மக்களின் அதிருப்தியை பெற்ற கட்சி திமுக நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெரும் என தெரிவித்தார்.

மேலும் படிக்க...

Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..

இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..

முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

Continues below advertisement