ஆம்னி பேருந்துகள் நேற்றிரவு முதல் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து இயக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது. கிளாம்பாக்கத்தில் போதிய வசதிகள் இல்லை; திடீரென மாற்றம் செய்தால் முன்பதிவு செய்த பயணிகள் பாதிக்கப்படுவார்கள் என பல்வேறு காரணங்களை கூறி கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தே ஆம்னி பேருந்து இயக்கப்படும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க தலைவர் அன்பழகன் தெரிவித்திருந்தார். இந்தநிலையில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார். ஆய்வு மேற்கொண்ட நிலையில் தேவைபடும் வசதிகளை குறித்து ஆம்னி பேருந்து உரமையாளர்களிடம் கேட்டறிந்தார்.
செய்தியாளர்களுக்கு பேட்டி.
கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்த தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ''ஆம்னி பேருந்துகளுக்கு இன்னும் பார்க்கிங் வசதி செய்ய வேண்டும் என்பதற்கான நடவடிக்கைகளை சிஎம்டிஏ நிர்வாகிகள் துரிதமாக எடுப்பார்கள். முடிச்சூரில் பார்க்கிங் வசதியானது மார்ச் மாத இறுதிக்குள் தயாராகிவிடும். அதுவரை பேருந்து நிலையத்தில் எதிர்ப்பக்கம் இருக்கக்கூடிய பார்க்கிங்கில் அவர்கள் நிறுத்துவதற்கான வசதியும் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த வசதிகளை பயன்படுத்தி பொதுமக்கள் பயணிப்பதற்கு எந்த இடையூறும் இல்லை என்ற நிலை உருவாகும். அதிலும் குறிப்பாக இன்றைக்கு ஆம்னி பேருந்துகளில் வந்த பயணிகள் கூடுதலாக எதிர்பாராமல் வந்திருந்தாலும் அவர்களை இங்கிருந்து நகரத்தின் மற்ற பகுதிகளுக்கு கொண்டு செல்வதற்கு கூடுதலாக 200 நடை பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது.
ஐந்து நிமிடத்திற்கு ஒரு பேருந்து
ஏற்கெனவே நாங்கள் தெரிவித்தபடி கிளாம்பாக்கத்தில் இருந்து கோயம்பேட்டுக்கு ஐந்து நிமிடத்திற்கு ஒரு பேருந்து இயக்கப்படுகிறது. கிண்டிக்கு மூன்று நிமிடத்திற்கு ஒரு பேருந்து இயக்கப்படுகிறது. தாம்பரத்திற்கு இரண்டு நிமிடத்திற்கு ஒரு பேருந்து இயக்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் நேரடியாக பேருந்து பிடிக்க வேண்டும் என்று வருபவர்களுக்கோ அல்லது தாம்பரம் நேரடியாக செல்ல வேண்டும் என்பவர்களுக்கோ தாம்பரம் டூ கிளாம்பாக்கம் ஒன் டூ ஒன் பேருந்து இன்றிலிருந்து இயக்கப்பட்டு வருகிறது.
அந்த பேருந்துகள் 10 நிமிடத்திற்கு ஒரு பேருந்துகள் இயக்கப்படுகிறது. எனவே பொதுமக்களுக்கான வசதி என்ன என்பதை ஆய்வு செய்து ஒவ்வொரு நாளும் கூடுதலாக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த பேருந்து முனையம் என்பது முழுமையாக மக்கள் பயன்பாட்டிற்கு வர தொடங்கி விட்டது. மற்ற போக்குவரத்துக் கழகங்களுடைய பேருந்துகள் விழுப்புரம், கும்பகோணம், சேலம் போன்ற போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகள் 30 ஆம் தேதியிலிருந்து கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்தில் 80 சதவிகித பேருந்துகள் முழுமையாக இயக்கப்படும். ஒரு 20% பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட இருக்கிறது. சிலர் திட்டமிட்டு வதந்தி பரப்பி வருகிறார்கள் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார் என்றார்.
கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள்...
- இ.சி.ஆர். மார்க்கமாக செல்லும் ஆம்னி பேருந்துகள்..
- சென்னையிலிருந்து வேலூர் உள்ளிட்ட மேற்கு மார்க்கமாக செல்லும் ஆம்னி பேருந்துகள்..
- சித்தூர், ரெட் ஹில்ஸ் வழியாக வடக்கு மார்க்கமாக செல்லும் ஆம்னி பேருந்துகள்..
இவை ஆம்னி பேருந்து நிலையத்திலிருந்து தொடர்ந்து இயங்குவதற்கு அனுமதிக்கப்படும் என்று போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு அரசு விரைந்து ஓர் தீர்வை எடுக்க வேண்டும் என்பது பயணிகளின் எதிர்பார்பாக இருக்கிறது.