MTC Bus Pass: இனி ஏ.சி பஸ்ஸில் பயணிக்கலாம்... அறிமுகமானது ரூ 2000 பஸ் பாஸ்! எங்கெங்கு கிடைக்கும்?

MTC AC BUS Pass: சென்னை மாநகர பேருந்துகளில் பயணம் செய்வதற்காக ரூ 2000 மாதாந்திர பயணச்சீட்டு திட்டத்தை இன்று முதல் அறிமுகம் செய்யப்பட்டது.

Continues below advertisement

மாநகர ஏசி பேருந்துகள் உட்பட அனைத்து பேருந்துகளிலும் பயணம் செய்ய ரூ 2000 மதிப்பிலான மாதாந்திர சலுகை பயணச்சீட்டு திட்டம் தொடங்கியது. 

Continues below advertisement

மாநகரப்பேருந்துகள்:

சென்னை மக்களின் போக்குவரத்தில் முக்கிய அங்கம் வகிப்பது மாநகர பேருந்துகள் தான், சென்னை மாநகர பகுதிகள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கும் சென்னை மாநகர பேருந்த்கள் தினந்தோறும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகளில் தினமும் லட்சக்கணக்கானோர் தங்கள் அனறாட பணிக்கு செல்வோர், பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் உட்பட பலர் பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக சென்னையில் தினமும் 3500-க்கும் மேற்ப்பட்ட மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. 

மாதாந்திர பயணச்சீட்டு: 

இந்த பேருந்துகளில் பயணம் செய்வதற்காக பல்வேறு சலுகைகள் மட்டும் மாதாந்திர பஸ் பாஸ்கள் உள்ளன, அதில் மாதம் ரூ.1000 செலுத்தி விருப்பம் போல் பயணம் செய்யும் மாதாந்திர பயணச்சீட்டு நடைமுறையில் உள்ளது. இதில் டீலக்ஸ், சாதரண கட்டணம், எக்ஸ்பிரஸ் பேருந்துகளில் மட்டுமே செல்ல முடியும். குளிர்சாதன வசதிக்கொண்ட ஏசி பேருந்துகளில் பயணிக்க முடியாது. 

புதிய மாதந்திர பயணச்சீட்டு: 

இந்த நிலையில் ஏசி பேருந்துகளுக்கும் மாதாந்திர பயணச்சீட்டு முறை கொண்டு வர வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் மாநகர போக்குவரத்துக்கழகம் ரூ 2000 மதிப்பிலான மாதாந்திர சலுகை பயணச்சீட்டு திட்டத்தை கொண்டு வந்தது. இதில் அனைத்து விதமான பேருந்துகளிலும் பயணம் செய்யலாம். 

இன்று முதல் அறிமுகம்:

இந்த பயணச்சீட்டு திட்டத்தை போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் இன்று துவக்கி வைத்தார். மேலும் இது குறித்து மாநகர போக்குவரத்துக்கழகம் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பயணிகள் கவனத்திற்கு! சென்னை, மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், குளிர்சாதன பேருந்து உட்பட அனைத்து பேருந்துகளிலும் பயணம் செய்ய ரூ.2000 மதிப்பிலான விருப்பம்போல் பயணம் செய்யும் மாதாந்திர சலுகைப் பயண அட்டை இன்று முதல் அறிமுகம்!

ஏற்கனவே நடைமுறையில் உள்ள, ரூ.1000 மதிப்பிலான விருப்பம்போல் பயணம் செய்யும் மாதாந்திர சலுகைப் பயண (குளிர்சாதன பேருந்து நீங்களாக) அட்டையையும் பயணிகள் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola