பொங்கல் பண்டிகை:


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட உள்ளனர்.  வழக்கமாக பண்டிகை காலத்தில் பொதுமக்கள் சிரமமின்றி ஊருக்கு சென்று வர அவர்களின் வசதிக்காகவும், நன்மைக்காகவும் தமிழக போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த பொங்கல் பண்டிகைக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. ஜனவரி 12ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 19,484 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து 11,006 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பொங்கல் பண்டிகை முடிந்து பிற ஊர்களில் இருந்து சொந்து ஊர்களுக்கு மக்கள் செல்வதற்காக ஜனவரி 16 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை 17,581 சிறப்பு பேருந்கள் இயக்கப்படுகிறது.




கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 5 முன்பதிவு மையங்களும், தாம்பரம் பேருந்து நிலையத்தில் ஒரு முன்பதிவு மையமும், கிளாம்பாக்கத்தில் 5 முன்பதிவு மையங்களும் செயல்படுகிறது. இதனை பயன்படுத்தி மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முன்பதிவு செய்து கொள்ளலாம். இச்சிறப்பு பேருந்துகளுக்கு www.tnstc.in மற்றும் tnstc official app ஆகிய இணையதளங்களில் வாயிலாக முன்பதிவு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


 அமைச்சர் சிவசங்கர் நேரில் ஆய்வு


 


சென்னை வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் பகுதியில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் கடந்த மாதம் 30 ஆம் தேதி பயன்பாட்டிற்கு வந்தது. பொங்கல் பண்டிகை முன்னிட்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். முன்னேற்பாடு பணிகள் குறித்தும் மற்றும் செய்ய வேண்டிய பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுரை வழங்கினார்.



 

இதனை அடுத்து செய்தியாளரை சந்தித்த அவர் தெரிவித்ததாவது : மக்கள் அதிகளவு கூடுவதை தவிர்க்கவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் ஆறு இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு சென்னையில் இருந்து அனைத்து பகுதியில் இருந்து பேருந்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 24 ஆயிரம் பேர் பொங்கல் பண்டிகையின் பொழுது பயணம் செய்தனர். இந்த ஆண்டு ஒரு லட்சத்து 32 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். மக்கள் கூடுதலாக இந்த ஆண்டு பயணம் செய்ய உள்ளனர் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 

 



எந்தெந்த பேருந்துகள் எங்கிருந்து இயக்கப்படுகிறது என்பது குறித்து, மக்களுக்கு ஊடகம் மூலமாக பத்திரிகை மூலமாக தொடர்ந்து தகவல் தெரிவிக்கப்பட்டன. முன்பதிவு செய்தவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலமாக தகவல் அளிக்கப்பட்டது என தெரிவித்தார்.  பேருந்து நிலையம் இப்பொழுதுதான் அமைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து கழகம் சார்பாக இந்த நல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேசிய சாலையிலிருந்து பொதுமக்கள் நீண்ட தூரம் நடந்து பேருந்து நிலைய முன்பகுதிக்கு வந்திருப்பதை பார்த்த பிறகு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன். பொதுமக்களுக்கு இலவசமாக மினி பேருந்துகள் இயக்கி மினி பேருந்துகள் மூலம் பொதுமக்களை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முன்பகுதிக்கு,  கொண்டு வந்து விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என கூறினார்