இறுதி கட்ட பணிகள் ஆய்வு

சென்னை கீழ்ப்பாக்கம் , பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரநாதர் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைக் கட்டிடங்களை முதல்வர் விரைவில் திறக்க உள்ள நிலையில் அங்கு நடைபெற்று வரும் இறுதிக் கட்ட பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு ; 

இதற்கு முன் 750 பிள்ளைகள் இந்த பள்ளியில் படித்துக் கொண்டு இருந்த நிலையில் தற்போது ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பயின்று வருவதாகவும் 32 வகுப்பறைகள் ரூபாய் 12 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது என்று கூறிய அவர் இந்த புதிய கட்டிடத்தை வரும் 27 ஆம் தேதி காலை 11 மணியளவில் மாணவர் பயன்பாட்டிற்கு முதல்வர் திறந்து வைக்கிறார் என்று கூறினார்.

ஒரு நாள் கூத்து மாநாடு 

அண்ணா, பெரியார், ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் குறித்து பல்வேறு விமர்சனங்களை வைத்தவர் முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை என்றும் அடிமை சாசனத்தை பாஜகவிடம் அதிமுக எழுதி விட்டு மேடையில் அமர்ந்து கொண்டுள்ளனர் முன்னாள் அமைச்சர்கள் என்றும் நேற்று நடந்த மாநாடு கடந்து சென்ற அரசியல் மாநாடு அது ஒரு நாள் கூத்து, கூடிக் கலைந்த மேக கூட்டங்கள் போல் கலைந்த மாநாடு.

பவன் கல்யாணுக்கு சவால் விட்ட அமைச்சர்

பவன் கல்யாணுக்கும் தமிழ்நாட்டிற்கும் என்ன தொடர்பு , யார் அவர் என்று கேள்வி எழுப்பிய அமைச்சர், பவன் கல்யாண் சென்னையில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று காட்டட்டும் பிறகு அவர் என்ன வேணாலும் பேசட்டும் நாங்கள் கேட்கிறோம்.

இதுவரை 117 முருகன் கோவில்களுக்கு குடமுழுக்கு நடந்துள்ளது.126 திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு பணிகள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. மேடை போட்டு மக்களை பிளவுபடுத்துகிறார்கள் பா.ஜ.க - வினர் என்றும் பாஜக சங்கீகள் கூட்டம் வேண்டுமா என்று தமிழக மக்கள் 2026 முடிவெடுப்பார்கள் என பேசிய அமைச்சர் பாஜகவில் நயினார் நாகேந்திரன் பலமுடையவரா ? அண்ணாமலை பலம் வாய்ந்தவரா என்ற போட்டி நிலவுவதாகவும் ஒருவர் பச்சை துண்டை எடுத்து சுற்றிக் கொண்டு இருக்கிறார் அது நயினார் நாகேந்திரன், காவி துண்டை சுற்றிக் கொண்டு இருக்கிறார் அண்ணாமலை என்றும் யார் வெற்றி பெறுகிறார்கள் என்று இனி தான் தெரியும் , இவர்கள் போட்டிக்காக நடந்த மாநாடு தான் மதுரை முருகர் மாநாடு என்று கூறினார்.