தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை கொண்டாடும் ஒரு பகுதியாக, மெட்ரோ ரயில் நிலையங்களில் இசையாட்டம் மற்றும் பறையிசை கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் என சென்னை மெட்ரோ ரயில் நிலையம் அறிவித்துள்ளது. 


இதுகுறித்து, வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது; 


சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை கொண்டாடுவதன் ஒரு பகுதியாக, சென்னை முழுவதும் உள்ள பல இசைக் கலைஞர்கள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து சென்னை மக்களுக்கு தமிழ் கலாச்சாரத்தின் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது இதன் தொடர்ச்சியாக 18.12:2021 முதல் மெட்ரோ இரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ இரயில்களில் பல்சுவை கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.


இதன் ஒரு பகுதியாக, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் நிமிர்வு கலையகம் அமைப்புடன் இணைந்து 26.12.2021 (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணி முதல் 8 மணி வரை கிண்டி மெட்ரோ இரயில் நிலைபத்தில் (தெரு நிலை) பறையிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.




இதனை தொடர்ந்து, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், “சர்கம் கொயர்" கலை குழுவுடன் இணைந்து 27.12.2021 (திங்கள்கிழமை) இரவு 7 மணி முதல் 8 மணி வரை அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ இரயில் நிலையத்தில் (தெரு நிலை) இன்னிசை கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது.


சென்னை மாநகரில் வசிக்கும் மெட்ரோ இரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள், மெட்ரோ இரயில் நிலையங்களில் நடைபெறும் இசை மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்து சிறப்பிக்குமாறு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.


கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காகவும். அனைத்து பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்காகவும் மெட்ரோ இரயில் நிலையங்களில் நுழைவதற்கும் மெட்ரோ இரயில்களில் பயணிப்பதற்கும் அனைத்து பயணிகளும் கட்டாயம் சரியாக முகக்கவசம் அணிந்திருப்பதுடன் தனிமனித இடைவெளியைக் கடைபிடித்து பயணம் செய்து சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


 இவ்வாறு, சென்னை மெட்ரோ ரயில் நிலையம் இணை இயக்குனர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.  


Margazhiyil Makkalisai: கலையும் அரசியலும் கைத்தளம் பற்றிக்கொண்ட பெருநிகழ்வு - மார்கழியில் மக்களிசை போட்டோஸ்