சென்னையின் மிகப்பெரிய அடையாளங்களில் ஒன்று மெரினா கடற்கரை. வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து சென்னைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் முதல் தேர்வாக இருப்பதும் மெரினா கடற்கரை என்பதால் மெரினா கடற்கரை தமிழக அரசு சார்பில் பல லட்சம் செலவில் பராமரிக்கப்பட்டு வருகிறது.


கடந்த 2020ம் ஆண்டு நம்ம சென்னை பகுதி  என்ற மெரினா கடற்கரையில் உருவாக்கப்பட்டது. சென்னையின் பெருமையை பறைசாற்றும் விதமாக நம்ம சென்னை என்ற மிகப்பிரம்மாண்டமான எழுத்துக்கள் அங்கு நிறுவப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் உள்பட பொதுமக்கள் பலரும் இந்த இடத்தில் நின்று செல்பி, புகைப்படங்கள் எடுப்பது வழக்கம்.




சுமார் 10 அடி உயரம் உள்ள இந்த நம்ம சென்னையின் எழுத்துக்கள் ராணி மேரி கல்லூரி எதிரே அமைந்துள்ளது. இந்த நிலையில், சமீபகாலமாக இந்த பிரம்மாண்ட எழுத்துக்களின் அருகில் நின்று செல்பி எடுக்கும் சிலர் இந்த  எழுத்துக்கள் மீது ஏறி நிற்பதாலும், அவற்றில் ஏறி விளையாடுவதாலும் அந்த எழுத்துக்கள் சேதமடைந்துள்ளது. இதனால், அந்த இடம் பொலிவிழந்துள்ளது.


இந்த இடம் சேதமடைந்திருப்பது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மாநகராட்சி பணியாளர்கள் தற்போது நம்ம சென்னை இடத்தில் பராமரிப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர்.




இதுதொடர்பாக, அதிகாரிகள் கூறும்போது நம்ம சென்னை செல்பி பகுதி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடம். சுற்றுலாதளம் என்பதால் பொதுமக்கள் 24 மணி நேரமும் செல்பி எடுப்பது வழக்கமாக உள்ளது. 24 மணி நேரமும் பொதுமக்கள் செல்பி எடுத்துக்கொள்கிறார்கள். இந்த பகுதியில் புகைப்படம் எடுக்க எதுவும் கட்டுப்பாடுகள் இல்லாத காரணத்தால் இந்த பகுதி சிலரால் சிதைக்கப்படுகிறது என்றனர். மேலும், இரவு 11 மணிக்கு மேல் பொதுமக்கள் நம்ம சென்னை பகுதி அருகே செல்ல அனுமதிக்கக்கூடாது என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


நம்ம சென்னை பகுதி மட்டுமின்றி மெரினா கடற்கரையில் சிறிய அளவில் சேதமடைந்துள்ள பிற பகுதிகளையும் சீரமைக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். சுதந்திர போராட்ட வீரர்களின் சிலைகள் மெரினா கடற்கரையில் வரிசையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண