Local Train Cancelled: சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் செல்லும் 5 புறநகர் ரயில்கள் வரும் 7,8 மற்றும் 9ஆம் தேதிகளில் தண்டவாள பராமரிப்பு பணிகளின் காரணமாக ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 


இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், தண்டவாள பராமரிப்பு பணிகளின் காரணமாக சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் செல்லும் 5 ரயில்கள் ஜுன் மாதம் 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் மட்டும் ரத்து செய்யப்படுவதகா குறிப்பிடப்பட்டுள்ளது. 


அதாவது, 7, 8, மற்றும் 9 தேதிகளில் மூர் மார்கெட் முதல் ஆவடிக்கு அதிகாலை 12.15க்கு புறப்படும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  


7, 8 மற்றும் 9 தேதிகளில் சென்னை கடற்கரையில் இருந்து மதியம் 1.20 மணிக்கு புறப்படும் அரகோணம் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும், ஜூன் 8ஆம் தேதி பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் - ஆவடிக்கு இரவு 11.55க்கு புறப்படும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இரவு மூர் மார்கெட்டில் இருந்து ஆவடி நோக்கி செல்லும் இரவு 11.30 ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.  


மேலும், ஜூன் 8ஆம் தேதி மூர் மார்க்கெட்டில் இருந்து ஆவடி நோக்கி இரவு 11.45 மணிக்குச் செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.