பட்டாபிராம் பணிமனையில் பராமரிப்புப் பணி நடைபெற இருப்பதால், இன்றும்(ஜனவரி,28), நாளையும் (ஜனவரி,29) மின்சார இரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் போக்குவரத்திற்கு மின்சார இரயில்கள் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. மாத பராமரிப்புப் பணிகள் காரணமான இரயில் சேவையில் இரண்டு நாட்களுக்கு மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு இரயில்வேயின் சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட அறிவிப்பின் விவரம்:
பட்டாபிராம் பணிமனையில் மேற்கொள்ளப்பட உள்ள பராமரிப்புப் பணி காரணமாக, சனி (ஜன.28, ) மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் (ஜன.29) இயங்கும் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் - ஆவடி இடையே இரவு 11.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் (வண்டி எண்: 43892) மேலே குறிப்பிட்ட இரண்டு நாட்களிலும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
சென்னை கடற்கரை-பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இடையே இரவு 11.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் (வண்டி எண்: 43759) ஜனவரி 29-ஆம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதற்குப் பதிலாக சென்னை கடற்கரை-ஆவடி இடையே இரவு 11.40 மணிக்கு பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்படும்.
வேளச்சேரி-பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இடையே இரவு 10.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் (வண்டி எண்: 43799) ஜனவரி, .28-ஆம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதற்குப் பதிலாக வேளச்சேரி-ஆவடி இடையே இரவு 10.30 மணிக்கு பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்படும்.
சென்னை சென்ட்ரல்-ஆவடி இடையே இரவு 11.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் (வண்டி எண்: 66007) ஜன.28, 29 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதற்குப் பதிலாக சென்ட்ரல்-ஆவடி இடையே இரவு 11.55 மணிக்கு பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல்-திருவள்ளூா் இடையே இரவு 11.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் (வண்டி எண்: 43255) ஜனவரி.28, 29 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதற்குப் பதிலாக சென்ட்ரல்-திருவள்ளூா் இடையே இரவு 11.50 மணிக்கு பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்படும்.
இதையும் படிங்களேன்..