சென்னையில் உள்ள தனியார் மல்டி ஸ்பெஷாலிட்டி குவாட்டர்னரி மருத்துவமனையான கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டியை சேர்ந்த மருத்துவர்கள் லியோமியோமா  கட்டியால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளித்துள்ளனர். 8.5x3 செமீ அளவுள்ள இந்த வகையான கட்டிக்கு எண்டோஸ்கோபி உதவியுடன் முதன் முதலாக சிகிச்சையளிக்கப்பட்டிருக்கிறது. சென்னையைச் சேர்ந்த 54 வயது நபர் ஒருவருக்கு உணவுக்குழாய் சுவரில் உருவாகும் லியோமியோமா என்ற  கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. கட்டியானது மூச்சுக்குழாய் மற்றும் மார்புக்கூட்டிலுள்ள உள்ள குழாய்களை அழுத்தியதால் நோயாளியால் சாப்பிட முடியாமல் போனதுடன் செரிமானக் கோளாறுகளையும் அனுபவித்தார். EUS துணையுடன் மேற்கொள்ளப்பட்ட பயாப்ஸி மற்றும் CT ஸ்கேன் மூலம், கட்டி 8.5x 3 செ.மீ அளவில் இருப்பது  25 ஜூலை 2022 அன்று கண்டறியப்பட்டது, கட்டியை அகற்றும் செயல்முறை 6 மணி நேரம் நீடித்தது. எண்டோஸ்கோபிக் முறையைப் பயன்படுத்தி இந்த அளவு பெரிய கட்டியை அகற்றுவது அரிதான நிகழ்வு, இந்த முறையைப் பயன்படுத்துவதால் அறுவை சிகிச்சைக்கு பின்  ஏற்படும் பாதிப்புகள் குறைவு.






 

இதுகுறித்து மருத்துவர்  விஷ்ணு A ராஜு சிகிச்சையைப் பற்றி  விவரித்தபோது, ​​“இந்தக் கட்டியானது 5 சென்டிமீட்டர் விட்டம் கொண்டதாக இருந்தது, இது மிகவும் அரிதானது. இந்த வகை அறுவை சிகிச்சை பொதுவாக ஒரு திறந்த அல்லது தோராகோஸ்கோபிக் அணுகுமுறையின் மூலம் செய்யப்படுகிறது, அப்படியான அறுவை சிகிச்சையில் குணமடைய அதிக காலம் பிடிக்கும். உணவுக் குழாயை கிளிப்புகள் மூலம் மூடிய பின்பு கட்டியை அகற்ற எண்டோஸ்கோபிக் அறுவை சிகிச்சை செய்தோம். இந்த கட்டியானது பெர் ஓரல் எண்டோஸ்கோபிக் டனலிங் அண்ட் டியூமர் ரீசெக்சன் என்ற தனித்துவமான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நீக்கப்பட்டது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம், நோயாளி விரைவாக குணமடைந்ததுடன் அவருக்கு வேறு அறிகுறிகள் எதுவும் இருக்கவில்லை. சென்னையில் இதுபோன்ற சிகிச்சை நடப்பது இதுவே முதல் முறை. சிகிச்சை முடிந்ததிலிருந்து நோயாளியின்  உடல்நிலை சீராக உள்ளது, அவர் தனது அன்றாட வேலைகளை வழக்கம் போல செய்ய முடியும்” என்று குறிப்பிட்டார்.  மிகவும் சிக்கலான இந்த சிகிச்சை  டாக்டர் விஷ்ணு அபிஷேக் ராஜு, மெடிக்கல் காஸ்ட்ரோஎன்டாலஜி மற்றும் தெரபியூடிக் எண்டோஸ்கோபி ஆலோசகர் மற்றும் மூத்த ஆலோசகர் டாக்டர் எம்.ஸ்ரீனிவாஸ் - மெடிக்கல் காஸ்ட்ரோஎன்டாலஜி & தெரபியூடிக் எண்டோஸ்கோபி ஆகியோர் அடங்கிய மருத்துவர் குழுவால் மேற்கொள்ளப்பட்டது.

 

நிர்வாக அதிகாரி மருத்துவர் அலோக் குல்லார், இந்த சிகிச்சை வெற்றி பெற்றதற்காக மருத்துவக் குழுவை வாழ்த்தி பேசும்போது, “இந்த மாதிரியான அரிய அறுவை சிகிச்சைகள் நோயாளியின் சிரமத்தை  கூடுமானவரை குறைக்கும் நோக்கத்துடன் மிகவும் கவனமாகவும் துல்லியமாகவும் செய்யப்படுகின்றன. பெரிய கட்டிகளை அகற்றுவதற்கான எண்டோஸ்கோபி செய்வதில் முன்னோடியாக இருப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். இந்த சிகிச்சையை வெற்றிகரமாக செய்ததற்காக முழு GGHC குழுவையும் நான் வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டார்.