சென்னையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் குறைக்கும் விதத்தில் சென்னை கோயம்பேட்டில் இருந்த புறநகர் பேருந்து நிலையத்துக்கு மாற்றாக வண்டலூருக்கு அருகே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டுபயன்பாட்டில் உள்ளது. தற்போது தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.
சிஎம்பிடி பேருந்து நிலையம்:
ரூ102 கோடி செலவில் கட்டப்பட்ட சிஎம்பிடி கடந்த 2002 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது 20 ஆண்டுகளுக்கு மேல் செயல்பாட்டில் இருந்து வருகிறது. கிளாம்பாக்கம் செயல்பாட்டில் வந்ததில் இருந்து கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்ட தென் மாவட்ட பேருந்துகள் கேசிபிடி பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. தற்போது கோயம்பேட்டில் இருந்து வேலூர், கிருஷ்ணகிரி, பெங்களூரு மற்றும் ஈசிஆர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
குத்தம்பாக்கம் பேருந்து நிலையம்:
சென்னை-பெங்களூரு புறவழிச்சாலையில் திருமழிசை அருகே அமைந்துள்ள புதிய குத்தம்பாக்கம் பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் தருவாயில் இருப்பதாகவும், ரூ.427 கோடி செலவில் கட்டப்பட்ட இது ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்திற்குள் திறக்கப்படும் என்றும் சிஎம்டிஏ மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பேருந்து நிலையம் செயல்ப்பாட்டுக்கு வந்தவுடன் வேலூர், கிருஷ்ணகிரி, வாலாஜா, ஓசூர், திருப்பத்தூர் மற்றும் பெங்களூரு போன்ற இடங்களுக்கு செல்லும் TNSTC மற்றும் SETC பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து குத்தம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு மாற்றப்படும்.
சிஎம்பிடியிலிருந்து திருப்பதி மற்றும் சித்தூருக்கு இயக்கப்படும் பேருந்துகள் மாதவரம் முனையத்திற்கு மாற்றப்படும்.
ஈசிஆர் செல்லும் பேருந்துகளி நிலை என்ன?
அதேப்போல் கோயம்பேட்டில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை (ECR) செல்லும் பேருந்துகளை இடமாற்றம் செய்வது குறித்த இறுதி முடிவு இன்னும் பகுதி இடமாற்றம் செய்வதற்காக வடபழனி, கே.கே.நகர் மற்றும் திருவான்மியூர் டிப்போக்கள் பரிசீலனையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்
இருப்பினும், கோயம்பேட்டை மூடுவதில் தாமதம் ஏற்படக்கூடும் என்று ஒரு அதிகாரி தெரிவித்தார். கிளாம்பாக்கம், கோயம்பேட்டிலிருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.இதனால் நகர் பகுதிகளில் இருந்து செல்ல ஏகப்பட்ட சிக்கல்களை பொதுமக்கள் சந்திப்பதாக எற்கெனவே புகார்களைப் பெற்று வருவதால், அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதால், குத்தம்பாக்கம் மற்றும் அண்ணா நகர் மேற்கு பணிமனைக்கு பேருந்துகளை மாற்றுவதற்கு முன் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் விரிவான முன்னெடுப்புகள் மேற்க்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், குத்தம்பாக்கத்திற்கான போக்குவரத்து இணைப்புகளை மேம்படுத்துவதற்கான திட்டங்களை சென்னை போக்குவரத்துக் கழகம் (MTC) இறுதி செய்துள்ளது. பூந்தமல்லி பணிமனையில் தற்போது இயக்கப்பட்டு வரும் 150 பேருந்துகளும் புதிய முனையத்திற்கு மாற்றப்படும், மேலும் 20 கூடுதல் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எத்தனை பேருந்துகள் மாற்றப்படும்?
தற்போது கோயம்பேட்டில் இருந்து 592 பேருந்துகள் ஓசூர், வேலூர், காஞ்சிபுரம், தர்மபுரி, கடலூர், புதுச்சேரி, சிதம்பரம், பெங்களூரு, திருப்பதி, திருப்பத்தூர் ஆகிய இடங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது.
தற்போது இதில் 400 பேருந்துகள் குத்தம்பாக்கத்திற்கு மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள பேருந்துகளில் 142(tnstc) 50(setc) பேருந்துகள் என 192 பேருந்துகளை அண்ணாநகர் மேற்கு பணிமனைக்கு மாற்றப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.