ஆளுநரை விமர்சிப்பது தனி மனித தாக்குதல் - கிருஷ்ணசாமி

பெரியாரை ஒட்டுமொத்தமாக குறை கூற முடியாது அதே சமயத்தில் மொத்தத்தில் அவர்தான் தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வந்தார் என்பது கூற முடியாது.

Continues below advertisement

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி ஆளுநரை விமர்சிப்பது ஒரு தனி மனித தாக்குதல், இதனை வன்மையாக கண்டிக்கிறோம் என டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

Continues below advertisement

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் ; 

தமிழர்களின் முக்கியமான அடையாளமான பொங்கல் விழா விமர்சையாக தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் கொண்டாடப்படுகின்ற போகி பண்டிகையில் பழைய பொருட்களை குறிப்பாக பிளாஸ்டிக் , டயர் போன்ற பொருட்களை எரிப்பதால் நகரங்களில் மாசு ஏற்படும் ஆபத்து இருப்பதால், தமிழகத்தில் எந்த பகுதிகளிலும் டயர்,  பிளாஸ்டிக் போன்ற பொருட்களை எரிவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

நாங்களும் சாலையில் இறங்கி போராடுவோம்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே டங்ஸ்டன் எடுப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்த்து வருகிறார்கள். இதனை தொடர்ந்து மக்கள் போராடும் நிலைமை ஏற்படுகிறது. மத்திய, மாநில அரசு காலம் காக்காமல் தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும். எடுக்கவில்லை என்றால் நாங்களும் சாலையில் இறங்கி போராடும் நிலைமை ஏற்படும்.

மாஞ்சோலை பணியாளர்களை வெளியேற்றும் நடவடிக்கை நிறுத்திக் கொள்ள வேண்டும் உடனடியாக  ஏற்கனவே கோவில் மாவட்டத்தில் 133 மலைவாழ் கிராமங்களும் பாதிக்கும் அளவு மக்களை வெளியேற்றி போராட்டம் நடைபெற்றது. சுற்றுச் சூழலை காரணம் காட்டி மலைவாழ் மக்களின் வெளியேற்றுவது முடியாது இது ஒரு தவறான நடவடிக்கை, மாஞ்சோலை வால்பாறை உள்ளிட்ட மலைவாழ் மக்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என்று வலியுறுத்தி கூறுகிறோம், 

பள்ளி, பொது இடங்கள் மற்றும் கல்லூரிகளில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடந்து வருகிறது, அதிகரித்து வருகிறது. நள்ளிரவில் எந்த ஒரு பெண் தனியாக பாதுகாப்பு நடந்து செல்கிறாரோ அதுதான் முழுமையான சுதந்திர பெற்ற நாடுகள் காந்தி கூறியது போல் தமிழகம் இல்லை, இதை அனைத்தையும் எதிர்த்து பிப்ரவரி முதல் வாரத்தில் புதிய தமிழகம் கட்சி சார்பாக போராட்டத்தை நடத்த உள்ளோம்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் விவகாரத்தில் தமிழக அரசு வெளிப்படையாக இருந்தால் புலன் விசாரணையின் போது ஏன் ஒரு நபர் இரண்டு நம்பர் என்று கூறவேண்டும், இந்த விஷயத்தைப் பொறுத்தவரை தமிழகத்தில் திமுக அரசு நடந்து கொண்டது சிறிதும் சரியில்லை, குற்றவாளி திமுகவை சேர்ந்தவர் என்றால் ஒத்துக் கொள்ள வேண்டும், பாதிக்கப்பட்ட பெண் யார் அந்த சார் என்று கூறும் பொழுது புலன் விசாரணை பெரிய போகிறது ஆனால் ஏன் தமிழக அரசு இந்த விவகாரத்தில் படி நடந்து கொள்கிறார்கள் என்று தெரியவில்லை.

நாங்கள் எதற்காக போராடுகிறோம் என்று ஜனநாயக முறையாக மக்களுக்கு சென்று அடைய முடியாமல் காவல்துறையினர் அனுமதி மறுக்கிறார்கள், எங்களுக்கான ஒரே வழி, ஆளுநர் இடத்தில் மனு கொடுப்பதுதான், திமுக ஓனர் நினைத்தால் மறுநாளே போராட்டத்தில் அனுமதி பெற்று போராடுகிறார்கள் இது எந்த விதத்தில் ஜனநாயகம், ஜனநாயகம் என்பது மாற்றுக்கருத்து உள்ளது தான் அந்த அடிப்படையில் நாங்கள் விளக்கத்தை நீதிமன்றத்தில் கொடுத்துள்ளோம், காவல்துறை ஆர்ப்பாட்டத்தில் எதுவாக இருந்தாலும் ஜனநாயக ரீதியாக முறையாக அனுமதி வழங்க வேண்டும், இந்த வழக்கின் தீர்வு ஜனவரி மாதம் முதலாம் தேதி நல்ல தீர்ப்பு வரும், 

எதிர்க்கட்சியாக இருக்கும் போது பொங்கல் தொகுப்பு ஐந்தாயிரம் கொடுக்க வேண்டும் என்று கூறியவர்கள் திமுக தான், 1330 அளவிற்கு கொடுக்க வந்துவிட்டார்கள் இதில் தமிழக மக்களை ஒரு ஏமாற்றுவதற்கு தான் சமம் என்று கூற முடியும், 

போக்குவரத்து துறை பொறுத்தவரை ஓய்வு பெற்றவர்களே பல லட்சம் பேரு உள்ளார்கள், மிகக் குறைந்த சம்பளத்தை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு ஓய்வூதிய  பணம் இதுவரை கிடைக்கவில்லை, ஒரு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்,

பெரியார் சமூக நீதிக்காக போராடியுள்ளார்  தலைவர்கள் சமூகநீதி பொருளாதாரம் உள்ளிட்டவைகளுக்காக போராடினர். ஆக பெரியாரை ஒட்டுமொத்தமாக குறை கூற முடியாது அதே சமயத்தில் மொத்தத்தில் அவர்தான் தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வந்தார் என்பது கூற முடியாது,

திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது ஒன்று கூறுகிறார்கள் உடனே மாற்றி பேசுகிறார்கள், உலக தமிழக மக்களிடம் உள்ளத்தை மூடி மறைக்க முடியாது, ஆளுநர் மீது அவதூர்பேரத்தில் குற்றச்சாட்டு வைத்து பரப்புகிறார்கள், அவர் கேட்டது தேசிய பற்று முக்கியம் என்பதால் முதலில் தேசிய கீதம் பாட வேண்டும் என்று கூறியது தவறல்ல, 

ஆளுநரை ஆர் எஸ் பாரதி கேஷுவல் லேபர் என்று கூறுகிறார் இது நியாயமல்ல, ஒரு தனி நபர் எந்த காரணத்தை கொண்டு காயப்படுத்தக் கூடாது, நேரடி ஒளிபரப்பு விஷயத்தில் சட்ட மன்றத்தை பார்க்கப்படும் இல்லாமல் இவர்கள் ஒளிபரப்பு எதிர்க்கட்சியின் ஒளிபரப்பை மறைப்பது நியாயம் அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

Continues below advertisement