"செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள, கோவளம் கடற்கரைக்கு 5-வது ஆண்டாக இந்த முறை மீண்டும் நீலக்கோடி சான்று கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்"

Continues below advertisement

மகிழ்ச்சியை கொடுக்கும் கடற்கரைகள் 

பொதுவாக கடற்கரைக்கு செல்வது என்பது பொதுமக்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றாக இருந்து வருகிறது. பொழுதுபோக்கிற்காகவும், மனது நிம்மதிக்காகவும் கடற்கரைக்கு ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் செல்வது வழக்கம். அவ்வாறு சுத்தமாக இருக்கும் கடற்கரைக்கு செல்வதற்கே பொதுமக்கள் அதிக அளவு விரும்புவார்கள். அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கோவளம் கடற்கரைக்கு, 5-வது ஆண்டாக நீலக்கோடி சான்றிதழ் கிடைத்துள்ளது. 

நீலக்கொடி சான்றிதழ் என்றால் என்ன ?

உலகம் முழுவதும் தூய்மை, சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பார்வையாளர்களுக்கு சிறப்பு வசதி அடிப்படையில் குறிப்பிட்ட சில கடற்கரைகள் தேர்வு செய்யப்படுகின்றன. இவ்வாறு தூய்மையாகவும், சுகாதாரமாகவும் இருக்கின்ற கடற்கரைக்கு சர்வதேச அளவில் அங்கீகரிக்கும் வகையில் நீல கொடி சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு நீல கொடி சான்றிதழ் வழங்கப்படும் கடற்கரைக்கு, சுற்றுலாப் பயணிகளிலேயே கூடுதல் வரவேற்பு என்பது குறிப்பிடத்தக்கது. 

Continues below advertisement

இந்த நீலக்கொடி சான்றிதழ் பெறுவதற்காக சர்வதேச அமைப்பு வாயிலாக, ஆண்டுதோறும் பல்வேறு கட்ட ஆய்வுகள் நடத்தப்படும். ஆய்வுகள் நடத்தப்பட்டு, முறையாக அனைத்து விதிகளையும் பின்பற்றினால் நீல கொடி சான்றிதழ் வழங்கப்படுகிறது. ஒருமுறை நீலக்கொடி சான்றிதழ் வழங்கப்பட்ட பிறகு, ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு செய்து சான்றிதழ் புதுப்பிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

கோவளம் நீலக்கொடி கடற்கரை - Kovalam Blue Flag Beach 

அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள கோவளம் கடற்கரைக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு நீலக்கொடி சான்றிதழ் வழங்கப்பட்டது. நீலக்கொடி சான்றிதழ் பெறுவதற்காக, கோவளம் பகுதியில் தனியாக கடற்கரையில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டிருந்தன. இதை எடுத்து அந்த கடற்கரையை அடிப்படையாக வைத்து, பல்வேறு சுற்றுச்சூழல் திட்டங்களும் அறிவிக்கப்பட்டன. 

கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து, இந்த கடற்கரை தூய்மையாக பராமரித்து வருவதால், ஒவ்வொரு ஆண்டும் இந்த கடற்கரைக்கு சான்றிதழ் தொடர்ந்து கிடைத்து வருகிறது. இந்தநிலையில் ஐந்தாவது ஆண்டாக தற்போது மீண்டும் நீலக்கொடி சான்றிதழ் கிடைத்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

10 கடற்கரைக்கு நீலக் கொடி சான்றிதழ் பெற திட்டம் 

தமிழகத்தில் கிடைத்துள்ள சர்வதேச அங்கீகாரமாக இது பார்க்கப்படுவதால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே இந்த கடற்கரைக்கு வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் கூடுதலான நீலக் கொடி சான்றிதழ் பெற்ற கடற்கரையை உருவாக்க தமிழக அரசு முயற்சி எடுத்து வருகிறது.

அந்த வகையில் சென்னையில் நான்கு இடங்களையும், கடலூரில் இரண்டு இடங்களிலும், விழுப்புரம் நாகப்பட்டினம், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய நகரங்களில் தலா 1 இடங்களிலும் என மொத்தம் 10 கடற்கரைக்கு நீல கொடி சான்றிதழ் நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.