கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்..

 

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய, செங்கல்பட்டு மாவட்டம் சென்னை புறநகர் பகுதியான வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் ஒரே வளாகத்தில் அனைத்து அரசு, தனியார் பேருந்துகளையும் இயக்கும் வசதிகளுடன் புதிய பேருந்து முனையம் அமைக்கப்பட்டு வருகிறது. இப்பேருந்து நிலையத்திற்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். சுமார் 393.74 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் இந்த பேருந்து நிலையம் வரும் விரைவில்  பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விரைவாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை, இணைக்கும் வகையில் மெட்ரோ துவங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.



 

அமைச்சர்கள் திடீர் ஆய்வு

 

கிளாம்பாக்கத்தில் நடைபெற்று வரும் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலைய பணிகளை அமைச்சர்கள் சேகர்பாபு, தா.மோ. அன்பரசன் ஆய்வு செய்தனர். இந்நிலையில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப பல பேருந்து நிலையங்கள் இருந்தால்தால் நெரிசல் குறையும், பேருந்து நிலையத்தில் கூடுதலாக புதிய பணிகள் நடைபெறுவதால் அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெறுவதாலும் காலதாமதம் ஏற்பட காரணம் என தெரிவித்தார்.

 

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே மெட்ரோ ரயில் விரிவுபடுத்த தேவையான ஏற்பாடுகளை அமைச்சர்கள் மேற்கொண்டு வருகின்றனர் மேலும் வண்டலூர் ரயில் நிலையம் அடுத்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே ரயில் நிலையமும் விரிவாக்கம் செய்யப்பட்டு ரயில் நிலையமும் அமைக்க அதற்கான துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார். பொங்கல் பண்டிகைக்குள் பயன்பாட்டிற்கு வருமா என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்து பேசுகையில், விரைவில் முடிக்கப்படும் ஆனால் தேதி சரியாக கூற முடியாது என பதில் அளித்தார். இதை வைத்து பார்க்கும் பொழுது, பணிகள் முடிய சற்று காலதாமதம் ஆகும் என கூறப்படுகிறது.

 


பேருந்து நிலைய சிறப்பம்சங்கள்

 

சிறப்பம்சங்கள்:-  அரசு புறநகர் பேருந்துகள், தனியார் ஆம்னி பேருந்துகள், சென்னை மாநகரப் பேருந்துகள் என அனைத்தும், ஒரே இடத்தில் இருந்து இயங்கும் வகையில் இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. எழில்மிகு தோற்றத்துடன் அனைத்து வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள் இங்கு இடம் பெற உள்ளன.



 

எவ்வளவு பேருந்துகளை நிறுத்த முடியும் :-  ஒரே நேரத்தில் 130 அரசுப் பேருந்துகள் மற்றும் 85 தனியார் ஆம்னி பேருந்துகள் நிறுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 2000 க்கும் மேற்பட்ட பேருந்துகளை சிரமமின்றி கையாள முடியும்.

 

புறநகர் பேருந்துகள் :- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு செல்ல வசதியாக 5 ஏக்கரில் 3,500 மாநகரப் பேருந்துகள் வந்து செல்ல மேற்கூரையுடன் கூடிய நடைமேடையும் அமைக்கப்பட்டுள்ளது.

 

இரண்டு அடித்தளங்கள் :-  நவீன தொழில்நுட்பத்தில் இரண்டு அடித்தளங்கள், தரைதளம், முதல் தளம் என கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல் அடித்தளத்தில் 260 கார்கள். 568 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையிலும் இரண்டாவது அடித்தளத்தில் 84 கார்கள்.