கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
சென்னை புறநகர் பகுதியான கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த பேருந்து நிலையத்துக்கு "கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்" என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கவுள்ளார்.
என்ன வசதிகள் உள்ளன
பேருந்து நிலையத்தில் உள்ள முக்கிய வசதிகள் என்னென்ன. என்பது குறித்த பிரத்தேக தகவல் உங்களுக்காக ஏபிபி நாடு சார்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
வரிசை எண் |
விளக்கம் | விபரம் |
1 | நிலத்தின் மொத்த பரப்பளவு | 88,52 ஏக்கர் |
2 | பேருந்து நிலையத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலம் |
59,86 ஏக்கர் |
3 |
பிரதான கட்டிடம் மற்றும் தளங்கள் | 2 அடித்தளம் + தரைத்தளம் + முதல்தளம் |
4 | பிரதான கட்டிடம் கட்டுமான பரப்பளவு | 60,034 சதுர மீட்டர் |
5 | புறநகர் பேருந்து நடைமேடை எண்ணிக்கை |
8 எண்கள் (1,12,150 சதுர அடி ) |
6 | மாநகர் பேருந்து நடைமேடை எண்ணிக்கை | 11 எண்கள் (36,200 சதுர அடி |
7 | புறநகர் பேருந்துகள் எண்ணிக்கை | 226 எண்கள்(அரசு பேருந்துகள் =164 + தனியார் பேருந்துகள் =62) |
8 | பணியில்லா பேருந்து நிறுத்தும் பாந்துகளின் எண்ணிக்கை | 144 எண்கள் |
9 | நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் எண்ணிக்கை (கீழ்தளம்) |
324 எண்கள் |
10 | இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் எண்ணிக்கை (கீழ்தளம்) | 2,769 |
11 | மாநகர் பேருந்து அலுவலகம் |
1 எண் (8,265 சதுர அடி) |
12 | மாநகர் பேருந்து நிலைய பரப்பளவு | 7.40 ஏக்கர |
13 | எரிபொருள் நிரப்புமிடம் | 2 எண்கள் (0.51 ஏக்கர்) |
14 | காவலர் அறை மற்றும் கண்கானிப்பு கேமரா அறை |
2 எண்கள் (1,230 சதுரஅடி |
15 | கீழ்தள நீர் தேக்க தொட்டி |
13.50 கிலோ லிட்டர் |
16 | கழிவு நீர் சுத்திகரிப்ப நிலையம் (650 கிலோ லிட்டர்) |
1 எண் 5920 சதுர அடி |
17 | தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் (300 கிலோ லிட்டர்) | 1 எண் (1450 சதுர அடி |
18 | மின் துணை நிலையம் | 1 எண் (8250 சதுர அடி) |
19 | ஜெனரேட்டர் | 2 எண் (500 KVA & 1500 KVA) |
20 | மின் தூக்கி (6 எண்கள் 20 பயணிகளுக்கு, 2 எண்கள் சர்வீஸ்) | 8 எண்கள் |
21 | பணம் எடுக்கும் இயந்திரம் | 1 எண் |
22 | நேரக்காப்பாளர் அறை | 25 எண்கள் (4,640 சதுர அடி ) |
23 | உணவகம் | 4 எண்கள் (4,675 சதுர அடி ) |
24 | துரித உணவகம் | 2 எண்கள் (3,865 சதுர அடி) |
25 | கடைகள் | 100 எண்கள் (14,810 சதுர அடி) |
26 | தாய்ப்பாலுாட்டும் அறை | 1 எண் (370 சதுர அடி) |
27 | அவசர சிகிச்சை மையம் மற்றும் மருந்தகம் | 2 எண்கள் (785 சதுர அடி) |
28 | கிடங்கு | 2 எண்கள் (970 சதுர அடி) |
29 | பொருள் பாதுகாப்பு அறை | 1 எண் (1230 சதுர அடி) |
30 | பயணிகள் தங்குமிடம் | 2 எண்கள் (6590 சதுர அடி) |
31 | பணியாளர் ஓய்வு அறை | 4 எண்கள் (13750 சதுர அடி) |
32 | தரைத்தள கழிவறைகள் | 12 எண்கள் (8130 சதுர அடி) |
33 | முதல்தள கழிவறைகள் | 12 எண்கள் (13560 சதுர அடி) |
34 | அலுவலகம் மற்றும் வணிக இடம் | 1 எண்கள் (39110 சதுர அடி) |
35 | மின்அறை | 16 எண்கள் (5254 சதுர அடி) |
36 | கான்கிரீட் சாலைகள் | 8514 சதுர அடி |
37 | புல்தரை | 8750 சதுர அடி |
38 | மழை நீர் சேகரிப்பு தொட்டி | 1 எண் (100 கிலோ லிட்டர்) |
39 | கழிவு நீரேற்று நிலையம் | 1 எண் (50 கிலோ லிட்டர்) |
40 | உயர் கோபுர மின் விளக்கு | 13 எண்கள் |
யாருக்கு பயன் தரும்
முக்கியமாக இந்த பேருந்து நிலையம் முழுமையாக பயன்பாட்டிற்கு வரும் பொழுது, மாவட்ட மக்களுக்கு போக்குவரத்து நெரிசில் இருந்து சற்று ஆறுதலை கொடுக்கும். இதன் மூலம் நேரடியாக சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து தென் மாவட்டத்தை நோக்கி பயணத்தை மேற்கொள்ள முடியும். அதேபோன்று வடமாவட்டங்களில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும் இந்த பேருந்து நிலையம், உதவியாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.