காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் மாநகராட்சியில் அதிமுக சார்பில் போட்டியிடும்51 வேட்பாளர்களை ஆதரித்து, காஞ்சிபுரம் செவிலிமேடு அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில்  முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான  எடப்பாடி கே பழனிச்சாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

 

தொண்டர்கள் மத்தியில் பேசுகையில், காஞ்சிபுரத்தில் நடைபெறும் முதல் முதலாக மாநகராட்சி தேர்தலில் அதிமுகவை சேர்ந்த நபர் மேயராகி வரலாற்றில் இடம் பிடிக்க வேண்டும். இனி எத்தனை ஆண்டுகள் ஆனாலும் முதல் முறையாக காஞ்சிபுரம் மாநகராட்சியில் மேயர் ஆனவர் அதிமுகவை சேர்ந்தவர் தான் என்ற வரலாற்று சாதனையை அதிமுக நிகழ்த்தும். பேரறிஞர் அண்ணா பிறந்த மண் காஞ்சிபுரம். அவர் வழியில் எம்.ஜி.ஆர் துவக்கிய இயக்கம் அதிமுக. அண்ணாவின் திட்டங்களை செயல்படுத்தியவர் எம்.ஜி.ஆர். அண்ணாவின் பெயரிலே கட்சி, அண்ணாவின் உருவத்தை கட்சிக்கொடியில் வைத்துள்ளது .



 

அதிமுக. 2021 தேர்தலில் சற்று கவனம் குறைவாக இருந்துவிட்டோம். எந்தவித திட்டங்களும் செய்யவில்லை மக்களுக்கு நன்மை செய்யவில்லை,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓர் விளம்பர பிரியர், எந்த தொலைக்காட்சியிலும், எந்த செய்தித்தாளிலும் அவர் தான் வர வேண்டும் என்ற விளம்பர பிரியத்தில் தான் அவர் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்.மக்களுக்கு எவ்வித நலத்திட்டத்தையும் செய்யவில்லை. அம்மா என்றுச் சொன்னாலே மு.க.ஸ்டாலினுக்கு பிடிக்கவில்லை, ஆகையால் தான் அம்மாவின் பெயரிலுள்ள அனைத்து மக்கள் நலத்திட்டங்களையும் அவர் முடக்கி வருகிறார் .

 

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடி சீர்க்குலைந்து போய் உள்ளது, மக்கள் யாரும் நிம்மதியாக இருப்பதில்லை, அதிமுக வேட்பாளர்கள் காவல்துறையினரால் மிரட்டப்படுவதாக செய்தி வருகிறது, காவல்துறை ஜனநாயக முறையில் கன்னியத்தோடு நடந்துக்கொள்ள வேண்டும், சட்டத்திற்கு எதிராக எந்த காவல்துறையும், அரசு அதிகாரியும் செயல்படக் கூடாது. தற்போதைய பொம்மை முதல்வர் போல் நான் இருக்க மாட்டேன், என் கை; மம்முட்டி பிடித்த கை, நான் மிகவும் கரடு முரடானவன். அதிமுக ஆட்சியில் இருக்கும் போது உள்ளாட்சித் தேர்தலை மிகவும் நியாயமாகவும், ஜனநாயக முறையிலும் நடத்தினோம் என தெரிவித்தார்.



 

நேர்மையாக செயல்பட வேண்டும், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் வழியில் உழைத்து வாழ வேண்டும், எவ்வித குறுக்கு வழியினை நாங்கள் பின்பற்ற மாட்டோம் என்று தான் அதிமுகவின் கட்சியினரும், தொண்டர்களும் வாழ்ந்த வருகின்றனர்.  நியாய விலை கடையில் கொடுக்கபட்ட பொங்கல் பரிசு பொருட்களில் கை பையுடன் 21 பொருட்கள் என்று சொன்னாங்க ஆனால் பெரும்பாலான நபர்களுக்கு கை பை கொடுக்கவில்லை. கடந்தாண்டு அதிமுக ஆட்சியில் ரூ.2500 பொங்கல் பரிசாகவும்,தரமான பொருட்களையும் கொடுத்தோம். மக்களுக்காக பொங்கல் தொகுப்பை திமுக கொடுக்கவில்லை ,அவர்கள் ஊழல் செய்யவே தான் திமுக கொடுத்தார்கள், அதுவும் தரமற்ற பொருட்களுடனான தொகுப்பினை கொடுத்தார்கள். பொங்கல் தொகுப்பில் வழங்கப்பட்ட  , 30 விலைக்கொண்ட பையை 60 ரூபாய்க்கு கணக்கு காட்டினார்கள்,ஆனால் அந்த பை கூட நிறைய மக்களுக்கு போய் சேரவில்லை, திமுக கொடுத்த பொங்கல் தொகுப்பில்  புழு பூச்சி இருந்தது .

 

குடும்ப அட்டை வைத்துள்ள குடும்ப தாய்மார்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தரப்படும் என சொன்ன திமுக தற்போது என்ன செய்தது,  கொடுக்காமல் மக்களை ஏமாற்றி வரும் அரசாக தான் உள்ளது திமுக. கல்வி கடன் ரத்து என வாக்குறுதி கொடுத்துவிட்டு தற்போது திமுக நிதி இல்லை என்று கூறுகிறார்கள், பிறகு ஏன் அதனை வாக்குறுதி கொடுத்து ஏமாற்ற வேண்டும் என தெரிவித்தார். இக்கூட்டத்தில் ஏராளமான அதிமுக கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.