காஞ்சிபுரம் பஸ் நிலையம் அருகில் உள்ள கர்ணகி அம்பாள், சமேத சித்ரகுப்தர் கோயில் மகா கும்பாபிஷேகம் வரும் இன்று நடைபெறுகிறது. காஞ்சிபுரத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க கேது, தோஷம் போக்கும் சிறப்புக்குரிய கோயிலாக, விளங்கும் சித்ரகுப்தர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, யாகசாலை பூஜைகள் மே மாதம் 1 ஆம் தேதி கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமங்களுடன் தொடங்குகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று காலை 9.30 மணிக்கு ராஜகோபுரத்திற்கு புனிதநீர் குடங்கள் எடுத்துச் செல்லப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.இதையடுத்து, மூலவர் சித்ரகுப்த சுவாமிக்கும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெறுகிறது.
1.காஞ்சிபுரம். நெல்லுக்காரத் தெருவில் எவ்வித வாகனங்கள் வராமல் தடுக்க காஞ்சிபுரம் டவுன் பேங்க் சந்திப்பு மற்றும் இரட்டை மண்டபம் சந்திப்பு அருகே தடுப்பு அரண்கள் அமைக்கப்பட்டுள்ளது.
2.காஞ்சிபுரம் டவுன் பேங்க் வழியாக இரட்டை மண்டபம் நோக்கி வரும் வாகனங்களை பூக்கடைச் சத்திரம் மற்றும் GH சாலை வழியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
3. இரட்டை மண்டபம் வழியாக டவுன் பேங்க் நோக்கி செல்லும் வாகனங்களை பேருந்து நிலையம் வழியாக மாற்றம் செய்யப்படடுள்ளது, என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்