காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை பகுதியில் அரசு டாஸ்மாக் குடோன் உள்ளது. மதுபான உற்பத்தி தொழிற்சாலைகளில் இருந்து எடுத்து வரப்படும் மதுபான பாட்டில்கள் இங்கிருந்து வாகனங்கள் மூலம் அரசு மதுபானக் கடைகளுக்கு அனுப்பி வைப்பது வழக்கம். காஞ்சிபுரம் கிழக்கு பகுதியில் மட்டும் சுமார் 110 கடைகள் இயங்கி வருகிறது. இதில் படப்பை, வாலாஜாபாத், ஒரகடம்  உள்ளிட்ட பகுதிகளில் இருந்து லாரிகளில் மதுபான வகைகள் கொண்டு வரப்பட்டது. 



 

இந்நிலையில் இந்த டாஸ்மாக் குடோனில் இருந்து பொருட்களை ஏற்றி செல்ல 15 ஆண்டுகளாக உள்ளூர் நிறுவனமான கற்பக விநாயகர் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் ஏலம் எடுத்து நடத்தி வந்த நிலையில் இந்த ஆண்டு வேறு ஒரு வெளி மாவட்டத்தைச் சேர்ந்த நபருக்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்களுக்கு கிடைத்த தகவலின் படி இன்று முதல் பணி இருக்காது என அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

 



 

இந்த நிறுவனத்தில் லாரி ஓட்டுநர், உதவியாளர், சுமை தூக்கி தொழிலாளர், சுமை இறக்கும் தொழிலாளர் என 150-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். திடீரென்று வேறு நிறுவனத்துக்கு டெண்டர் மாறியது காரணமாக பணி வழங்கப்படாது என நினைத்து காஞ்சிபுரம் தமிழ்நாடு வாணிபக் கழக டாஸ்மார்க் கூட முன்பு ஒரு மணி நேரத்துக்கு மேலாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

தகவல் இருந்து வந்த டாஸ்மாக் அதிகாரிகள் இன்று அவர்களுக்கு வழக்கம் போல் வேலை வழங்கியதால் அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர். திடீரென்று டாஸ்மார்க் சுமை துவக்கி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.