காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூா் பகுதியில் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே அறிஞா் அண்ணா அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு வந்த அமைச்சா் மா.சுப்பிரமணியன் உள்நோயாளிகள், புறநோயாளிகள் பிரிவு உள்ளிட்ட மருத்துவமனையின் அனைத்துப் பகுதிகளில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்பொழுது அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களிடம் நலம் விசாரித்த அமைச்சா் மா.சுப்பிரமணியன் அவா்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தாா். இதேபோல, மருத்துவமனைக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள், மருத்துவமனையில் ஏற்படுத்தவேண்டிய வசதிகள் குறித்து மருத்துவா்களிடமும் அவா் கேட்டறிந்தாா். வேலூா் பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக அமைச்சா் மா.சுப்பிரமணியன் காரில் சென்றாா். வழியில் ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துவமனையில் திடீா் ஆய்வு மேற்கொண்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
திடீரென்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனைக்குள் நுழைந்து ஆய்வு மேற்கொண்டது மருத்துவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. பல காலமாக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வரும் நிலையில் திடீரென்று அமைச்சர் ஆய்வு மேற்கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவர்களின் வருகைப்பதிவேடு, எவ்வளவு புறநோயாளிகள் இருக்கு என்று மருத்துவம் பார்த்து உள்ளார்கள் என்பது குறித்த பதிவேடு, உள்நோயாளிகள் குறித்த பதிவில் ஆகியவற்றை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். அது மட்டுமின்றி நேரடியாக சென்று உள் நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்த முறையாக மருத்துவம் அளிக்கப்படுகிறதா என்பது குறித்தும் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரின், இந்த திடீர் அதிரடி ஆய்வு பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
நடிகர் ஹிப்ஹாப் தமிழா ஆதி வீட்டின் மீது கல் வீசி தாக்குதல்..! என்ன நடந்தது?
ஸ்ரீபெரும்புதூரில் கவுன்சிலருக்கு அரிவாள் வெட்டு - 6 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்