காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டம் தெற்கு கோட்டத்திற்கு உட்பட்ட தாமல் மற்றும் முசுரவாக்கம் துணை மின் நிலையங்களில் நாளை பராமரிப்பு பணி காரணமாக  மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது. எனவே மின்சாரத்தை பயன்படுத்தி,  முக்கிய தேவைகள்  ஏதாவது இருப்பின் அதற்கு ஏற்றவாறு திட்டமிட்டு கொள்ளுமாறு  மின்சார வாரியம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் எங்கெங்கு மின்தடை ? 

இதுகுறித்து காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டம் தெற்கு   கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிப்பது: தாமல் மற்றும் முசிறிவாக்கம் துணை மின் நிலையங்களில் நாளை மின் நிறுத்தம்  செய்யப்பட உள்ளது.  காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை  பராமரிப்பு பணிக்காக இந்த மின் நிறுத்தும் செய்யப்பட உள்ளது. பாலுசெட்டி சத்திரம்,  தாமல்,  வதியூர், ஒழுக்கோல்பட்டு, கிளார், களத்தூர், பெரும்புலிப்பாக்கம்,  பொய்கை நல்லூர், ஜாகீர் தண்டலம் , பனப்பாக்கம், முசிறவாக்கம், முத்துவேடு , பெரும்பாக்கம் கூத்திரமேடு ,திருப்புகுழி , சிறுவனை  மற்றும் அதன் சுற்றியுள்ள கிராம பகுதிகளில்  பராமரிப்பு காரணமாக மின்சாரம் தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் மின் கட்டண விவரம்:

தமிழ்நாட்டில் 8 ஆண்டுகளுக்கு பிறகு மின் கட்டணம் கடந்த மாதம் 10-ஆம் தேதி முதல் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வரும் 2026ம் ஆண்டு வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தின் படி  முதல் 100 யூனிட்களுக்கு எந்தவித கட்டணமும் இல்லை என்ற நிலை தொடரும். அதன்பின்னர் 200 யூனிட்டுகளுக்கு பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 27.50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல்  300 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு 72.50 ரூபாய் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 400 யூனிட் வரை பயன்படுத்தோவருக்கு மாதம் ஒன்றுக்கு 147.50 ரூபாய் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மின் பயன்பாடு கூடுதல் கட்டணம் (2 மாதங்களுக்கு):
200 யூனிட் 55 ரூபாய்
300 யூனிட் 145 ரூபாய்
400 யூனிட் 295 ரூபாய்
500 யூனிட் 310 ரூபாய்
600 யூனிட் 550 ரூபாய்
700 யூனிட் 595 ரூபாய்
800 யூனிட் 790 ரூபாய்
900 யூனிட் 1,130 ரூபாய்

இந்தக் கட்டண உயர்வு அனைத்தும் வரும் 2026-27 வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடில் கடைசியாக 2014-ஆம் ஆண்டு மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.


 

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண