காஞ்சிபுரத்தில் தடையை மீறி விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த 2 டன் பிளாஸ்டிக் பறிமுதல் செய்த மாநகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர். அருள்நம்பி ரூபாய் 1,50,000 அபராதம் விதித்தார்.
பிளாஸ்டிக் என்று அரக்கன்
காஞ்சிபுரம் ( Kanchipuram News ) : பிளாஸ்டிக் என்பது நமது எல்லோருடைய அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு பொருளாக உள்ளது. இதனை பயன்படுத்தி எறிவதன் மூலம் அது பூமியில் மக்காமல் இயற்கைக்கு எதிராக விளங்கி வருகிறது. குறிப்பாக இதுபோன்ற பிளாஸ்டிக் குப்பைகளை நீர் நிலைகள் , சாலை ஓர கால்வாய்கள் உள்ளிட்டுவைகளில் வீசுவதால் பெருத்த எதிர் வினைகளை நாம் இனிவரும் காலங்களில் சந்திக்க வேண்டிய சூழல் உள்ளது.
தடை செய்தும் தொடரும் பயன்பாடு
தற்போது தமிழ்நாடு அரசு பிளாஸ்டிக் உபயோகிப்பதை தவிர்ப்போம் என்ற வாசகத்தை முன்னிறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் மாநகராட்சிகள், நகராட்சி , பேரூராட்சி , ஊராட்சி என அனைத்து பகுதிகளிலும் இது குறித்த விழிப்புணர்வு அளித்தும், தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பது சட்டப்படி குற்றம் எனவும் இதனை மீறுவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உரிய அபராதம் விதிக்கவும் அரசு வழிகாட்டியதின் பேரில் திடீர் ஆய்வுகளை, அவ்வப்போது உணவகங்கள் சிறு கடைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருள் விற்பனை அகம் என அனைத்திலும் ஊழியர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
காஞ்சிபுரத்தில் தொடரும் பயன்பாடு
அவ்வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் இதுகுறித்து பலமுறை அறிவிப்புகள் விழிப்புணர்வுகள் என ஏற்படுத்தியும் இதன் நிகழ்வுகள் தொடர்வதாக இருந்த குற்றச்சாட்டின் பேரில் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் அறிவுரையின் பேரில் , ஆணையர் கண்ணன் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
திடீர் ஆய்வு
அதன் ஒரு பகுதியாக மாநகராட்சி நகர்தல் அலுவலர் அருள்நம்பி , துப்புரவு ஆய்வாளர்கள் ரமேஷ்குமார், குமார் , சீனுவாசன் ஆகியோர் கொண்ட 15 பேர் குழு தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படும் இடங்களாக தொடர்பு புகார் வந்த என்னைக்காரர் தெரு, ரயில்வே சாலை, கோட்டை கொல்லை சுப்புராயன் தெரு ரெட்டி பேட்டையில் அமைந்துள்ள தனியார் குடோன் உள்ளிட்டவைகளில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இரண்டு டன் எடையுள்ள பிளாஸ்டிக்..
இதில் பல்வேறு கடைகளில் இருந்து சுமார் 2 டன் எடையுள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் ஊழியர்களால் பறிமுதல் செய்யப்பட்டு சில நபர்களுக்கு எச்சரிக்கை விடுத்தும், சிலருக்கு அபராதம் விதித்த வகையில் 1,50 ,000 ரூபாய் மாநகராட்சி வருவாய் ஈட்டி உள்ளது. அபராதம் விதிக்கப்பட்டவருக்கு இனி வரும் காலங்களில் இது போன்று செயலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்