சிப்காட் மாம்பாக்கம் துணை மின் நிலையம்'
காஞ்சிபுரம் மாவட்டம், சிப்காட் மாம்பாக்கம் துணை மின் நிலையத்தில் மின்சாதன பராமரிப்பு பணிகள் நடைபெறுதல் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், சிப்காட் மாம்பாக்கம் 230/110/33-11 கிலோ வோல்ட் துணை மின் நிலையத்தில் அத்தியவாசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 16.05.2023 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சுங்குவார்சத்திரம், சேந்தமங்கலம், சந்தவேலூர், பாப்பான்குழி, இராமானூஜபுரம், கீரநல்லூர், குண்ணம், சிறுமாங்காடு, அயீமச்சேரி, ஆரனேரி, சிவன்கூடல், திருங்கலம், மொலச்சூர், சோகண்டி, காந்தூர், திருப்பந்தியூர், புதுப்பட்டு, பண்ணூர், கண்ணூர், மற்றும் குள்ளவாக்கம், ஏலக்காமங்கலம், பன்ரூட்டி, பன்ரூட்டி கண்டிகை, வெண்பாக்கம், ஆகியவை இதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடைப்படும் என்பதை திருப்பெரும்புதூர் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மின் கட்டண விவரம்:
தமிழ்நாட்டில் 8 ஆண்டுகளுக்கு பிறகு மின் கட்டணம் கடந்த மாதம் 10-ஆம் தேதி முதல் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வரும் 2026ம் ஆண்டு வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தின் படி முதல் 100 யூனிட்களுக்கு எந்தவித கட்டணமும் இல்லை என்ற நிலை தொடரும். அதன்பின்னர் 200 யூனிட்டுகளுக்கு பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 27.50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் 300 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு 72.50 ரூபாய் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 400 யூனிட் வரை பயன்படுத்தோவருக்கு மாதம் ஒன்றுக்கு 147.50 ரூபாய் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மின் பயன்பாடு | கூடுதல் கட்டணம் (2 மாதங்களுக்கு): |
200 யூனிட் | 55 ரூபாய் |
300 யூனிட் | 145 ரூபாய் |
400 யூனிட் | 295 ரூபாய் |
500 யூனிட் | 310 ரூபாய் |
600 யூனிட் | 550 ரூபாய் |
700 யூனிட் | 595 ரூபாய் |
800 யூனிட் | 790 ரூபாய் |
900 யூனிட் | 1,130 ரூபாய் |
இந்தக் கட்டண உயர்வு அனைத்தும் வரும் 2026-27 வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடில் கடைசியாக 2014-ஆம் ஆண்டு மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்