காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 274 ஊராட்சி பகுதிகளில் தூய்மை இந்தியா திட்டத்தின் திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்த நம்ம ஊரு சூப்பர் எனும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏனாத்தூர் ஊராட்சியில் கண்ட கண்ட இடங்களில், குப்பைகளை போட்டு வைக்கும் கிராம மக்களிடையே நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வவை ஏற்படுத்தும் வகையில், கல்லூரி மாணவர்கள், தூய்மை பணியாளர்கள், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்ட பேரணியை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி துவக்கி வைத்தார்.



 

ஏனாத்தூர் கிராமத்தில் உள்ள மளிகை கடைகள், உணவகங்களில்,பிளாஸ்டிக் பயன்படுத்த கூடாது என்று துண்டு பிரசுரங்களை கொடுத்து, அறிவுரைகளை வழங்கினார். பின்னர் கல்லூரி மாணவர்கள் தூய்மை பணியாளர்டன் சேர்ந்து கிராம வீதிகளில் ஆங்காங்கே கிடந்த குப்பைகளை அள்ளிய மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி  கிராம மக்களுக்கு மஞ்சள் பைகளை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

 



 

பின் அவ்வழியே தூய்மை பணியின் பொழுது இருந்த உணவு கடையை கைக்குள் நுழைந்து ஆட்சியர் உணவகத்தில் உள்ளே பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் சுகாதாரமற்ற முறையில் குளிர்சாதன பெட்டி இல்லாமல் இறைச்சி வைத்து இருந்த உணவு கடையை மூட அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.



 

மேலும் ஏனாத்தூர் பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்ட பொழுது பல இடங்களில் குப்பைகளை கொட்டி இருந்ததால் ஏன் இதனை அகற்றாமல் சுகாதார சீர்கேடு போல் வைத்திருப்பதாக ஊராட்சி மன்ற தலைவரை எச்சரித்தும் இதனை அப்புறப்படுத்தாமல் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரித்தார். இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் செல்வகுமார், வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் ஆர்.கே. தேவேந்திரன்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பவானி,முத்து சுந்தரம், ஊராட்சி மன்ற தலைவர் வரதன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளும் ஒன்றிய அலுவலர்களும் கலந்து கொண்டனர்.