காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கணிசமாக குறையத் துவங்கியுள்ளது.  இரண்டு வாரங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளொன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 200-ஆக இருந்தது. ஊரடங்கும் எதிரொலியாக தற்போது கணிசமாக குறைந்தது நாளொன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.




காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று கொரோனா வைரஸ் தோற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 68 கொரோனா வைரஸ் தொற்றால்  குணமடைந்து ஒரே நாளில் வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 38 . காஞ்சிபுரம் பெரு நகராட்சி பகுதியில் 15 நபர்களும், காஞ்சிபுரம் வட்டத்தில் 8 நபர்கள் , குன்றத்தூரில் 14, உத்திரமேரூர் மற்றும் வாலாஜபாத் பகுதிகளில் 7 நபர்களும், மாங்காடு, ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் 9 நபர்களுக்கு பிற மாவட்டத்தைச் சேர்ந்த 15 நபர்களுக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.




காஞ்சிபுரம் மாவட்டத்தை பொருத்தவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவு குணமடைந்து வீடு திரும்புபவர்களின் தற்போது படுக்கைகள் காலியாக உள்ளன. அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 70241 ஆக பதிவாகியுள்ளது.


காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தாலும் தொடர் கண்காணிப்பு மற்றும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் மற்றும் அவர் குடும்பத்தை சார்ந்தவர்கள் உள்ளிட்டவர்களுக்கு பரிசோதனை செய்து அவர்களை தனிமைப்படுத்தி நடவடிக்கைகளால் தற்போது வைரஸ் தொற்றின் வேகம் குறைந்து வருகிறது. அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட படுக்கைகள் காலியாக உள்ளன. கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வந்தாலும் பொதுமக்கள் தங்களுடைய நலன் மற்றும் அனைவரின் நலன் கருதி முகக்கவசம் அணிவது சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது உள்ளிட்ட அரசு கூறும் அனைத்து நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டும் .