காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கொதிக்கும் எண்ணெயில் தவறி விழுந்து படுகாயமடைந்த ஒன்றரை வயது பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பால்நல்லுர் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன்.

 

இவரது மனைவி ஷாலினி. இவர்களுக்கு ஒன்றரை வயதில் பவிஷ்கா என்ற மகள் உள்ளார். இந்த நிலையில், கடந்த 7-ஆம் தேதி வீட்டில் நடந்த நிகழ்ச்சிக்காக பலகாரம் சுட்டுள்ளனர். பின்னர் சூடான எண்ணையை சட்டியுடன் கீழே இறக்கி வைத்துள்ளனர். அப்போது, பக்கத்து வீட்டு குழந்தைகளுடன் விளையாடி கொண்டிருந்த குழந்தை பவிஷ்கா திடீரென வீட்டிற்குள் ஓடி வந்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக கீழே இருந்த எண்ணை சட்டியில்  குழந்தை தவறி விழுந்துள்ளது.



 

இதில் குழந்தையில் தொடை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து, அவரை சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு குழந்தை பவிஷ்காவிற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி குழந்தை நேற்று பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் பெற்றோர் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

 

இது குறித்து காவல்துறையிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது பெற்றோர்கள், சற்று கவனக்குறைவாக இருந்ததால் இந்த விபத்து நடைபெற்றுள்ளது என தெரியவந்துள்ளது. சம்பந்தப்பட்ட குழந்தை தவறுதலாக என்னை தொட்டியில் விழுந்து படுகாயமடைந்து, தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தது தொடர்பாக உறவினர்களும்  விசாரணையும் நடைபெற்றது என தெரிவித்தனர்.

 



 


 

கவனக்குறைவு காரணமாக எண்ணெய் சட்டியில் தவறி விழுந்து படுகாயம் அடைந்த குழந்தை, உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.