அழகு முத்துகோன் ( Maveeran Alagumuthu Kone) 

 

காஞ்சிபுரம் (Kanchipuram News): கடந்த மாதம் 11-ம் தேதி, இந்திய சுதந்திர போராட்ட வீரரான அழகு முத்துக்கோன், 266 ஆவது பிறந்தநாள் விழா விமரிசையாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.  அதன் ஒரு பகுதியாக, காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம் பகுதியில் அமைந்துள்ள யாதவ மகாசபை சத்திரத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் திருவுருவப் படத்திற்கு பல்வேறு கட்சியினர், சமுதாய அமைப்பினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து யாதவ மகா சபையின் சார்பில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட பேரணி காஞ்சிபுரத்தின் முக்கிய வீதிகளில் நடைபெற்றது.




 


 

சிலையை திறந்து வைக்க முற்பட்டனர்

 

இந்நிலையில், சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழாவை ஒட்டி யாதவ மகா சபை சார்பில் வீரர் அழகு முத்துகோனுக்கு சிலை அமைக்கப்பட்டு , திறப்பு விழா நடைபெற இருந்தது. யாதவ சத்திரத்தின் பகுதியில் அரசு அனுமதியின்றி அமைக்கப்பட்டு இருந்த அழகு முத்துக்கோன் சிலையை திறக்க வருவாய்த் துறையினரும் காவல்துறையினரும் தடை விதித்து இருந்தனர். சிலை  திறப்பு விழா நடைபெறுவதையொட்டி, அதனை தடுத்து நிறுத்த வருவாய்த் துறையினரும், காவல்துறையினரும் குவிக்கப்பட்டு இருந்தனர். பேரணி சென்று விட்டு வந்த யாதவ மகா சபையினர் அரசு அனுமதி இன்றி வைக்கப்பட்ட அழகு முத்துக்கோன் திருவுருவசிலையை திறந்து வைக்க முற்பட்டனர்.




 


 

தள்ளுமுள்ளு

 

பாதுகாப்பிற்கு நின்றிருந்த போலீசாரும் வருவாய்த்துறை இருந்தும் யாதவ மகா சபை நிர்வாகிகளை தடுத்து நிறுத்த முயன்றனர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தள்ளுமுள்ளுவை மீறி யாதவ மகா சபையினர் வீரர் அழகுமுத்துக்கோன் திருவுருவ சிலையை திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். போலீசார் வருவாய்த் துறையினர் தடையை மீறி, சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் சிலை திறந்து வைக்கப்பட்ட சம்பவத்தால் காஞ்சிபுரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

மீண்டும் திறக்கப்பட்டது

 

இதனை அடுத்து  தமிழ்நாடு யாதவர் மகா சபை சார்பில் உயர்நீதிமன்றத்தில் சிலை வைக்க அனுமதி கேட்டு  மனு தாக்கல் செய்திருந்தனர்.  மனுவை விசாரித்த  உயர் நீதிமன்ற நீதிபதி  14ஆம் தேதி மாலை 6 மணிக்குள்ளாக  சிலையை சுற்றி அமைக்கப்பட்டு இருந்த இரும்பு தகர அடைப்புகளை அகற்றுமாறு உத்தரவிட்டார்.  இதனை அடுத்து இன்று மாலை  வருவாய்த்றையினர் மற்றும் காவல்துறையின் முன்னிலையில் சிலையின் அடைப்புகள் அகற்றப்பட்டு  திறக்கப்பட்டது.  சிலை திறக்கப்பட்ட பொழுது, ஏராளமான  தமிழ்நாடு யாதவ மகா சபை நிர்வாகிகள்,    வீர வணக்கம்  முழக்கமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.  இதனை அடுத்து  சிலைக்கு பால் அபிஷேகம் செய்து,  மாலை அணிவித்து, பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும்  கொண்டாடினர்.

 



மேலும் செய்திகளை தெரிந்து கொள்வதற்கு