காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் டிசம்பர் 23ஆம் தேதி முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள அண்ணா காவல் அரங்கத்தில் காஞ்சி புத்தகத் திருவிழா 2022 நடைபெற உள்ளது. இந்த புத்தகத் திருவிழா குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விளம்பரங்கள் மேற்கொள்ளுதல் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.



இதில் புத்தகத் திருவிழா குறித்த விளம்பர பதாகைகள் மற்றும் இணையதளங்களில் ஒளிபரப்பும் வகையில் குறும்படம் ஆகியவை வெளியிடப்பட்டு திரையிடப்பட்டது. சங்க காலம் தொட்டு தமிழை வளர்த்த காஞ்சிபுரத்திலும்,  பல்லவர் சோழ மன்னர்கள் காலங்களில் கட்டிடக்கலைக்கு உதாரணமாக விளங்கும் கைலாசநாதர் கோயில் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரநாதர் கோயில் என திருத்தலங்களும் உலக புகழ் பெற்ற அத்திவரதர் வைபவம் நடைபெற்ற காஞ்சி குறித்த காணொளியும் , அதே நேரத்தில் சினிமா திரைப்படங்களில் புதிய முத்திரை பதித்த காஞ்சி மாநகரின் புகழ் பெற்ற எழுத்தாளர் பாடலாசிரியர் நா. முத்துக்குமார் பிறந்த விளையாடிய காஞ்சியில் , உலகப் புகழ் பெற்ற பட்டு நகரம் தொழிற்சாலை நகரம் என பல்புகழ் கொண்ட காஞ்சி மாநகரில் புத்தகத் திருவிழா நடைபெறுவதாகவும் இந்த காணொளியில் டிஜிட்டல் தரத்தில் ஒளிபரப்பும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது.



இந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி பேசுகையில் , காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அண்ணா காவல் அரங்கத்தில் நடைபெறவுள்ள காஞ்சி புத்தகத் திருவிழா 23ஆம் தேதி தொடங்கி ஜனவரி 2ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாகவும் , இதில் நூற்றுக்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் சிந்திக்க தூண்டும் நட்சத்திர பேச்சாளர்கள் மனதை மயக்கும் கலை நிகழ்ச்சிகள் குழந்தைகள் விரும்பும் நவீன அம்சங்கள் என பல வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



இதனை கண்காணிக்கும் வகையில் மாவட்ட அலுவலர்கள் தலைமையில் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், சரியான முறையில் இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் நடத்திட அனைவரும் செயலாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார். விளம்பர பதாகைகள் காணொளி காட்சிகள் ஆகியவற்றை வெளியிட சாதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி , மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதா உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.



மேலும் இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் புண்ணியகோட்டி , மகளிர் திட்ட இயக்குனர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்த குறும்படத்தில் காஞ்சிபுரம் பிரபல திரைப்பாடல் ஆசிரியர் நா.முத்துக்குமாரை முன்னிறுத்திய செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

 









ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண