சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரி: தற்காலிகமாக நியமனம்!

அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரியை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Continues below advertisement

கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாகப் பணியாற்றி வந்த சஞ்ஜீப் பானர்ஜி, கடந்த ஜனவரி மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்று கொண்டார். மேலும், இவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

Continues below advertisement


இந்நிலையில், தீடிரென உச்ச நீதிமன்ற கொலீஜியம் மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியாக சஞ்ஜீப் பானர்ஜியை இடமாற்றம் செய்ய மத்திய அரசிடம் பரிந்துரை செய்தது.  இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இருந்த சஞ்ஜீப் பானர்ஜி பணியிட மாற்றம் செய்ய குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்திருக்கும் நிலையில், அவர் மேகாலையா உயர் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். 

 

இந்தநிலையில், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரியை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும், தற்காலிக தலைமை நீதிபதியாக செயல்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

முன்னதாக, சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக செயல்பட்டு வந்த சஞ்ஜீப் பானர்ஜியை இடமாற்றம் செய்யும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்ற கொலீஜியத்திற்கு மூத்த வழக்கறிஞர்கள் கடிதம் எழுதினர். அவர்கள் எழுதிய அந்த கடிதத்தில், பெரிய நீதிமன்றங்களில் அதிக வழக்குகளை திறம்பட கையாண்ட அனுபவம் கொண்ட சஞ்ஜீப் பானர்ஜியை மேகாலயா போன்ற சிறிய மாநில உயர்நீதிமன்றங்களில் அவரது அனுபவம் முழுமையாக பயன்படாது. எனவே, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜியை இடமாற்றம் செய்யும் முடிவை கைவிட வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். 

ஏற்கனவே, சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலய உயர்நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை வழக்கறிஞர்கள் 237 உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு கடிதம் எழுதி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

யார் இந்த முனிஷ்வர் நாத் பண்டாரி?


தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தின் 51 வது தலைமை நீதிபதியாக பதவியேற்கவுள்ள முனிஷ்வர் நாத் பண்டாரி, வழக்கறிஞராகவும், நீதிபதியாகவும் தனக்கென்ன தனி முத்திரை பதித்தவர். இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்ற நீதிபதியாக முதல் முறையாக நியமிக்கப்பட்டார். பின்னர், 2019 ஆம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். இப்போது சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். முனிஷ்வர் நாத் பண்டாரி, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பல்வேறு சவால் நிறைந்த வழக்குகளை சந்தித்து தீர்ப்பெழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

Continues below advertisement